திருவண்ணாமலை..வந்தவாசி..மாம்பட்டு சர்வமங்கள காளியம்மன்கோயில்

 திருவண்ணாமலை..வந்தவாசி..மாம்பட்டு சர்வமங்கள காளியம்மன்கோயில்


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மாம்பட்டு கிராமத்தில் பழமையான புத்திரவதிஅம்மன்  முத்து மாரியம்மன்ஆதிசக்தி  சர்வமங்கள காளி சக்திபீடம் கோயில் உள்ளது 

இக்கோயில் கீழ்சாத்த மங்கல (மதுரா) மாம்பட்டு கிராம பகுதியில அமைந்துள்ளது.

திருக்கோவில் வரலாறு :

81 அடி உயரம், 18 கைகளுடன் அருள்பாலிக்கும் காளியம்மன்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா மாம்பட்டு அண்ணாநகர் ஏரியில்  பிரசித்தி பெற்ற மகாசக்தி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 81 அடி உயரம், 18 கைகளுடன் கூடிய ஆதிசக்தி ஸ்ரீசர்வமங்கள காளியம்மன் சிலை உள்ளது. கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜைன துறவிகள் பொன்னூர் மலையிலிருந்து தனது சீடர்களுடன் இக்கோயிலுக்கு வந்துள்ளனர்.

 கோயில் அமைந்துள்ள ஏரியில் அழகிய சோலையாக மரங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்ததால், அங்கு ஆசிரமம் மற்றும் ஜெயின் கோயில் அமைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அழகிய சோலையாக இருந்த இடத்தில், கடுமையான புயல் வீசியதால், அதிர்ச்சி அடைந்த துறவிகள் ஆசிரமம் மற்றும் கோயில் கட்டும் எண்ணத்தை கைவிட்டு அருகே உள்ள கீழ்சாத்தமங்கலம் கிராமத்திற்கு சென்று தங்கியதாக வரலாறு கூறுகிறது.

பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் பாதியிலேயே நின்றுவிட்டதாகவும், பிறகு படவேட்டை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த சம்புவராயர்கள் இந்த கோயிலை கட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களாலும் இந்த கோயிலை கட்டி முடிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோயில் கட்டும் பணி முழுமையாக நிறைவு பெறாமலேயே பூஜை செய்யப்பட்டு வந்துள்ளது. மேலும் கோயிலில் விளக்கேற்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் உழவுக்கு நெய் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது.

 கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்த பழமை வாய்ந்த ஆலமரம் புயலால் சாய்ந்ததாகவும், பின்னர் அதே இடத்தில் வளர்ந்த வேப்பமரமும், அரசமரமும் இன்றளவும் உள்ளது.  25 வருடத்திற்கு முன்னர் அமுடூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி வள்ளியம்மாள் என்பவரது கனவில் முத்துமாரியம்மன் தோன்றி அமுடூரில் இருந்து மாம்பட்டு கிராமம் வந்துவிடும்படி கூறினாராம்.ள

இதனால் சிறுவயதிலேயே அந்த சிறுமி மாம்பட்டு கிராமத்திற்கு சென்று, பல இன்னல்களுக்கு பிறகு கோயில் கட்டும்பணியை தொடங்கினார். இதற்கிடையே குரங்குசாமியார் என்ற சித்தர், வள்ளியம்மாளை திருமணம் செய்து கொண்ட அன்றே திடீரென மாயமானார். இதுவும் முத்துமாரியம்மனின் திருவிளையாடல் என கருதி கோயிலிலேயே தங்கியிருந்த வள்ளியம்மாள் இளம் வயதிலேயே இயற்கை எய்தினார். இதன்பிறகு வள்ளியம்மாளின் சகோதரர் லட்சுமணன் என்பவர் கோயிலை மண்டபத்துடன் கட்டி முடித்தார். கோயில் வளாகத்தில் 81 அடி உயரத்தில், 18 கைகளுடனான சர்வ மங்கள காளி சிலையும் நிறுவப்பட்டது.






ஆலய சிறப்பு :

பில்லி, சூனியம், ஏவல் போன்றவை குணமாகும்

குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

மன நிம்மதி, மன சந்தோஷம் கிடைக்கும்

செவ்வாய் வெள்ளி ஞாயிறு கிழமைகளில் அருள்வாக்கு நடைபெறும்


நேரம்: காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையும்

மாலை 5.00 முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்


தொடர்புகொள்ள

ஆலய குருக்கள்

திரு. ஆறு. இலட்சுமணன்

9443214380

கருத்துகள்