அறந்தாங்கி அருகே குளமங்கலம் பெருங்காரையடிமீண்ட அய்யனார்கோயிலில் மாசிமக விழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே குளமங்கலம் பெருங்காரையடிமீண்ட அய்யனார்கோயிலில் 19ந்தேதி மாசிமக விழாவை முன்னிட்டு  பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அறந்தாங்கி அருகே அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் குளமங்கலத்தில் பழமையான பெருங்காரையடிமீண்ட அய்யனார்கோயில் உள்ளது.இக்கோயிலில் நடைபெற்ற மாசி மக விழாவை முன்னிட்டு அதிகாலையில் அய்யனாருக்கு அபிஷேகம் செய்து அதனை தொடர்ந்து கோயில் எதிரில் உள்ள ஆசியாவிலேயே மிக உயரமான  33 அடி உயரமுள்ள குதிரைக்கு வேண்டுதல் செய்த பக்தர்கள் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தாங்களுடைய வாகனங்களில் கொண்டு வந்த காகிதத்தால் ஆன கலர் மாலைகளை சாற்றி வழிபாடு செய்தனர். வழிபாட்டில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை 
குளமங்கலம் கிராமத்தார்கள்,இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் கண்ணன்,ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஆகியோர் செய்தனர்.



கருத்துகள்