திருச்சி முசிறி காரு குடி சிவன் கோயில்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபடவேண்டிய சிவன்கோயில் . ஒவ்வொரும் தான் பிறக்கும் தினங்களில் எந்த நட்சத்திரம் நடப்பில் உள்ளதோ அதுதான் அவர்கள் நட்சத்திரம் அதை ஜென்ம நட்சத்திரம் என்றும் சொல்வார்கள்.இந்நிலையில் இவ்வுலகில் உள்ள ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபடவேண்டிய கோயில் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் முசிறி தாலுகாவில் காருகுடி என்ற கிராமத்தில் உள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் திருபெயர் கைலாசநாதர் இவர் சுயம்புவாக தோன்றி அளவில்லா அருள்பாலித்து வருகிறார்.அம்பினை பெயர் கருணாகரவல்லி.இத்தல இறைவனை வழிபட்டால் காசியில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் கிடைக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.கண்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள இறைவன வழிபட நற்பலன் கிட்டுவதாக நம்பி வழிபாடு செய்து பலன் அடைந்து வருகிறார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தோர் இந்த கோயிலுக்கு வந்து உரிய முறைப்படி சிவனை வழிபாடு செய்ய நல்ல பலன் கிட்டுவதாக ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தோர் தொடர்ந்து வழிபாடு செய்து வருகிறார்கள்.எனவே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபாடு செய்வது முக்கியமான ஒன்றாகும்.

கருத்துகள்