ஆவுடையார் கோயிலில் நவகிரகங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது ஆவுடையார்கோவில் இந்த ஆவுடையார் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக சிறப்புமிக்க ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இந்தக் கோவில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோவிலாகும் இந்த கோவிலில் நடைபெறும் வழிபாடுகள் சிற்பங்கள் ஓவியங்கள் ஆகியன அனைத்தும் மற்ற சிவன் கோவில்களை விட சற்று வித்தியாசமாகவும் அற்புதமாகவும் காணப்படும் பிரசித்தி பெற்ற தலமாகும்     எல்லா சிவன் கோவில்களிலும் நவக்கிரகங்கள் இருப்பது வழக்கம் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி அமைக்கப் பட்டு நவக்கிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு நவகிரகமும் ஒவ்வொரு திசையை நோக்கி இருக்கும் ஆனால் ஆவுடையார் கோயிலில்    இந்த வழிபாடு சற்று மாறுபட்டு காணப்படும் ஆவுடையார்கோவில் நவக்கிரகங்கள் துணியில் மட்டுமே காட்சி கொடுப்பது   சிறப்பாகும்    ஒவ்வொரு பெரிய தூணிலும் ஒவ்வொரு நவகிரகம் அமைந்துள்ளது அந்த துணியிலேயே நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது கோவில் வழிபாடுகளில் வித்தியாசமாக காணப்படும் ஆவுடையார் கோவிலில் நவக்கிரகங்களின் வழிபாடும் வித்தியாசமாக காணப்படும் ஒரு சிறப்பு ஆகும் இந்த கோவிலில் பார்க்க வேண்டிய சிற்பங்களும் வழிபடவேண்டிய தெய்வங்களும் அதிகம் காணப்படும் ஆவுடையார்கோவில் பற்றி படித்து படித்து தெரிந்து கொள்வதை விட நேரில் பார்த்து பகவானை வழிபட்டு மெய்சிலிர்க்க வேண்டியது நமது கடமையாகும்

கருத்துகள்