ஆவுடையார் கோயிலில் பழனி சிவ. தொண்டர்கள் உழவார பணி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலில் திண்டுக்கல் மாவட்டம் பழனி  ஆண்டவர் உழவாரப்பணி குழுவினர் கோவிலையும் கோவிலில் பயன்படுத்தப்படும் பொருட்களையும் சுத்தம் செய்யும்   உழவார. பணியில்   ஈடுபட்டனர்

   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயிலாகும் உலகப் பிரசித்தி பெற்ற திருவாசகம் பிறந்த கோயிலாகும்

 இக்கோயிலில் உள்ள சுவாமிகளுக்கு பயன்படுத்தப்படும்  பொருட்கள்   அனைத்தும்  பழமையானவை   பித்தளை மற்றும் தாமிர பூஜை பொருட்கள் திருவிளக்கு   திருவாச்சி  உள்ளிட்ட பொருட்களை அதற்குரிய பொடிகள் மூலம் சுத்தம் செய்தும்  அதனைத் தொடர்ந்து கோயில் பிரகாரம் வளாகம் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக கழுவி சுத்தம் செய்தனர்

இந்த உழவாரப்பணியை   65க்கும் மேற்பட்ட  பழனி   சிவ தொண்டர்கள் செய்தனர்   இந்த பணி திண்டுக்கல் மாவட்டம் பழனி பழனி ஆண்டவர் உழவாரப்பணி குழுவை சேர்ந்த விஜய. ஆனந்த்  சுவாமிகள் முன்னிலையில் நடந்தது

கருத்துகள்