திண்டுக்கல் நத்தம் கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணி

திண்டுக்கல் நத்தம் கைலாசநாதர்  கோயிலில் உழவாரப்பணி


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரை ஒட்டிய பகுதியில்  கோவில்பட்டியில் பழமையான பிரசித்தி பெற்ற கைலாசநாதர்  கோயில் உள்ளது.

 பழமையான இக்கோயிலை  சுத்தம் செய்யும் பொருட்டு மதுரையை சேர்ந்த இரு பெரும் உழவாரப்பணிக்குழுக்களான மதுரை அன்னை ஸ்ரீ மீனாட்சி உழவாரப்பணிக்குழுவை சேர்ந்த முருகானந்தம் சுவாமிகள் முன்னிலையில் 20 பேர்களும், ஒம்நமச்சிவாய உழவாரபணிக்குழுவை சேர்ந்த வெள்ளம்பலம் தலைமையில் 15 பேர்களும் ஆக மொத்தம் 35 பேர்கள் சேர்ந்து நத்தம் கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணியை மேற்கொண்டனர்.

 அப்போது கோவிலை சோப் ஆயில் போட்டு கழுவி கோயிலில் இருந்த மங்கலபொருட்கள்,  மணி, தீப விளக்கு திருவாச்சி  ஆகியவற்றினை சுத்தம் செய்யும் பொடிகளால் சுத்தம் செய்து அதனை தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் செண்பகவள்ளியம்மனை வழிபாடு செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மற்றும் குருக்கள் வெங்கட்ராமன் செய்தனர்.





இந்த சிவதொண்டர்கள் பல்வேறு பணிகளில் இருந்தாலும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கோயிலுக்காக சிவதொண்டு உழவாரப்பணி செய்வது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


கருத்துகள்

  1. இறையருள் பெற சிவத்தொண்டு சிறந்த சேவை

    பதிலளிநீக்கு
  2. சிவ தொண்டை வெளியிட்டு சிறப்பித்த நிருபருக்கு மனமார்ந்த நன்றிகள் அன்புடன் சிவ முருகதாஸ்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக