தில்லை நடராஜர் கோயிலில் தென்கைலாய பக்திபேரவை உழவாரப்பணி

தில்லை நடராஜர் கோயிலில் தென்கைலாய பக்திபேரவை உழவாரப்பணி






தமிழகத்தில் உள்ள பல முக்கியமான கோயில்களிலில் தென் கயிலாய பக்திபேரவை(சிவாங்கா) சிவதொண்டர்கள் சுவாமி கைலாச தலைமையில் 140க்கும் மேற்ட்டவர்கள் உழவாரப்பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மே 26ந்தேதி ஆன்மிக சிறப்புமிக்க வரலாற்று சிறப்பு மிக்க  உலக பிரசித்திபெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.கோயிலில் உள்ள தீட்சிதர்கள் தலைமையில் வழிகாட்டுதலோடு சுவாமி கைலாசா தலைமையில் பணி செய்தனர். மிகப்பெரிய கோயிலாக உள்ள கோயிலின் ஒரு பகுதியில் உள்ள பெரியதுாண்கள் சிற்பங்களுக்கு அழுக்குகளை நீக்கும் பொடிமூலம் நன்கு தேய்த்து அழுக்கு போகும்வரை தேய்த்து கழுவி சுத்தம் செய்தனர்.இறைப்பணிக்காக கழுவும்பொருட்கள் மற்றும் பொடிகளை சென்னை நடராஜன் அய்யா ஏற்பாடு செய்தார்.

இந்த இறைப்பணியில் சிதம்பரம்,பாண்டிச்சேரி,திருச்சி,சேலம்,வாழப்பாடி,கடலுார்,சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த சிவதொண்டர்கள் பங்கேற்று உழவாரப்பணி செய்து சிவனருளுக்கு பாத்தியமானார்கள்.

உழவாரப்பணியில் ஈடுபட்டோர் தாங்கள் செய்த பாக்யமாக கருதி சிவனை வழிபட்டு அடுத்து உழவாரப்பணியை நோக்கி புறப்பட்டனர்.முன்னதாக திருவட்டார் கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்ட தென் கயிலாய பக்திபேரவை(சிவாங்கா) சிவதொண்டர்கள் அடுத்து பாண்டிச்சேரி திருமூலநாதர்கோயில் பணிக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் 274 சிவ தலங்களில் முதன்மையான தலமாகும்.மூலவர் திருமூலநாதர் அம்மன் உமையாம்பிகை..தல விருட்சம் தில்லை மரம்.மூவர்பாடிய பஞ்சபூத தலங்களில் இதுவும் ஒன்றாகும்.இறைவன் சுயம்புவாக அருள்பாலிப்பவர்.இக்கோயிலில் குழந்தை செல்வம்வேண்டுவோர்,கலைகளில் தேர்ச்சிபெறவிரும்புவோர்,நோய் நீங்கி மன நிம்மதியுடன் வாழ இத்தலத்தில்  வழிபட நற்பலன் கிட்டும் தலமாகும்.சுயம்புவாக உள்ள திருமூலநாதரையும் பிரதான மூர்த்தியாக உள்ள  நடராஜரையும் வழிபட முக்தி கிட்டுகிறது.


சிவதொண்டர்களே செய்தி குறித்து கருத்து பதிவிடுங்க.....comments

கருத்துகள்

கருத்துரையிடுக