திருவிளக்கப்பாடி சிவன்கோயில் திருப்பணிக்கு நிதிகோருதல்

திருவிளக்கப்பாடி சிவன்கோயில் திருப்பணிக்கு நிதிகோருதல்





கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவிற்குட்பட்ட கிராமமான திருவிளக்கப்பாடி கிராமம் உள்ளது.இந்த கிராமத்தின் முகப்பில் மிகபழமையான சிவன்கோயில் உள்ளது.இக்கோயிலில் உள்ள சிவன் திருவிளங்கேஸ்வரர் என்ற திருநாமத்தினால் வழிபாடு செய்யப்படுகிறது.

இந்நிலையில் மிக மிகப்பழமையான இந்த திருக்கோயிலை கட்டிட திருவிளக்கப்பாடி கிராமமக்கள் முடிவு செய்து பழமையான அக்கோயிலை சுத்தம் செய்து தற்போது முதற்கட்டமாக சிவபெருமானுக்கு மட்டும் கர்ப்பக்கிரகத்துடன் கூடிய அர்த்தமண்டப பணிகள் நடைபெற்ற நிலையில் பணிகள் நடைபெறால் முழுமைபெறாமல் அரைகுறையாக உள்ளது.

எனவே திருவிளக்கப்பாடி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நீண்டநாள் கனவான திருவிளங்கேஸ்வரர் கோயில்கட்டப்பட்டு அதற்கு கும்பாபிஷேகம் கண்டிடவேண்டும் என்று அனு தினமும் சிவனை நினைத்தவண்ணம் உள்ளனர்.

எனவே இந்த கோயில் முழுமையான திருப்பணி நடந்திட சிவ பக்தர்கள் சிவதொண்டர்கள் நேரில் வந்து பார்வையிட்டு தற்போது பணிகள் நடந்தநிலையில் இனிவரும் காலங்களில் நடைபெறவேண்டிய பணி ஆகியவற்றினை திருப்பணி செய்யும் அன்பர்களிடம் கேட்டறிந்நு  சிவனை வழிபட்டு அந்த சிவன்கோயில் திருப்பணி நடைபெற உதவிடவேண்டும் என்று வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.


இந்தகோயில் செல்ல விருத்தாச்சலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் 15 கி.மீ தொலைவில் திருவிளக்கப்பாடி கிராமம் உள்ளது.

கருத்துகள்

கருத்துரையிடுக