தென் காளகஸ்தி எனும் இராஜபதி ராஜகோபுர கும்பாபிஷேக விழா ஜீன் 14ந்தேதி நடைபெறவுள்ளது
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே ராஜபதி கிராமத்தில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது.இக்கோயிலில் வரும் 14ந்தேதி ஏழுநிலை நுாதன ராஜகோபுர திருப்பணிவேலைகள் நிறைவடைந்த நிலையில் வரும் 14ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது
கோயிலைப்பற்றி.........
அகத்தியமுனிவரின் சீடர் உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி வழிபட சிவன் அருளால் அகத்தியமுனிவர் 9 தாமரை மலர்களை கொடுத்து தாமிரபரணியாற்றில் விடுமாறும் அந்த மலர்கள் ஒதுங்கும் இடத்தில் லிங்கத்தை வைத்து வழிபட சிவமுக்தி கிடைக்கும் என கூறினார் அதன்படி வழிபாடு செய்து உரோமச மகரிஷி சிவமுக்தியடைந்தார்.இந்த 9 கோயில்களும் நவ கைலாயங்கள் ஆகும்.இதில் ராஜபதி 8வது தலம்.சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தாமிரபரணியில் வெள்ளம்வந்தபோது ராஜபதி கோயில் முற்றிலும் பாதிக்கப்பட்டது.பின்னர் கிராம மக்கள் லிங்கத்தை எடுத்து ஓலைகொட்டகையில் வைத்துவழிபாடுசெய்து பல காலம் கடந்து கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம் 2010ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயில் நவகைலாயங்களில் கேதுக்குரிய 8வது நவகைலாய தலமாக உள்ளது.
இக்கோயிலில் புத்திரபாக்யம் வேண்டியும்,ராகுகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் வழிபட நற்பலன் கிட்டுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் கைலாஷ் டிரஸ்ட் மூலம் திருப்பணி நிறைவுற்று ஜீன் 7ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாகவேள்வி தொடங்கி ஜீன்.14ந்தேதி வைகாசி 31ந்தேதி ராஜகோபுர கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து 1008 கலாசாபிஷேகமும் கூனம்பட்டிகல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகளின் தலைமையில் காஞ்சி சங்கரமட ஸ்ரீ விஜயேந்திரர் ஆசியுடன் துாத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலய முதல்வர் இரா.செல்வம் சிவாச்சாரியார் என்கிற கல்யாணசுந்தர சிவாச்சாரியார் சர்வசாதகபொறுப்பேற்று நடக்கிறது.
தொடர்ந்து நடைபெறும் யாகவேள்வி மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பான விபரங்களுக்கு கோவை கருப்பசாமி விழாக்கமிட்டி தலைவர் சிவத்திரு பாலசுப்ரமணியன் தலைமை அர்ச்சகர் சிவத்திரு லட்சுமணன் சிவாச்சாரியாரை தொடர்பு கொள்ளலாம்.
செ்ய்தி குறித்து கருத்துக்களை கமெண்ட் பிரிவில் பதிவிடலாமே......

கருத்துகள்
கருத்துரையிடுக