வஜ்ஜிரகிரி பவுர்ணமி கிரிவல யாத்திரை 16 06 19 நடைபெறவுள்ளது.






வஜ்ஜிரகிரி பவுர்ணமி கிரிவல யாத்திரை ஆனி 1ந்தேதி  16 06 19  நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரர் அருள்பாலிக்கும் வஜ்ஜிரகிரி மலையை வலம் வந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கும்.இந்த கிரிவலம் 16ந்தேதி மாலை மலையடிவாரம் வழிவிடு விநாயகர் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது

இதில் விழுப்புரம் மேலமங்கலம் திருமடம் தவத்திரு ஸ்ரீ குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்,சென்னை உத்தண்டி ஸ்ரீ சுத்தானந்தர் ஆஸ்ரமம்,ஸ்ரீ ஈஸ்வரானந்த சுவாமிகள்,மாமண்டுர் வடபாதி சித்தர் தவத்திரு ஸ்ரீ சக்தி முத்துகுமாரசுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கவுள்ளார்கள்...

சுமார் 1500 ஆண்டுகளுக்குமேல் பழமைவாய்ந்த கடல் மட்டத்தில் இருந்து 700 அடிஉயரமுள்ள 306 படிக்கட்டுகள் கொண்ட சித்தர்கள் வாழும் சஞ்சீவி மூலிகை நிறைந்த வஜ்ஜிரகிரி மலை உச்சியில் தும்பிமுனிவர்,சுகர்முனிவர்,அகத்திய முனிவரும் வழிபட்ட மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் மற்றும் மலைப்பாதையில் பைரவர் கன்னிமூல கணபதி ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.

வஜ்ஜிரகிரி என்ற முருக கடவுளின் திருநாமம் கொண்ட மலையில் தந்தையும் தாயும் அதாவது சிவனும் அம்பாளும் அளவற்றி அருள்பாலித்து வருகிறார்கள்


கிரிவல ஏற்பாடுகளை வஜ்ஜிரகிரி வடிவேலன் கிரிவலக்குழ மற்றும் சிவனடியார்கள் செய்து வருகிறார்கள்.

கருத்துகள்