புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வெள்ளூர் சுந்தர்ராஜபெருமாள் கோயில் மணமேல்குடி அருகே 6 கி.மீ தொலைவில் வெள்ளுர் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தின் முகப்பில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக மிக பழமையான சுந்தர்ராஜபெருமாள் கோயில் உள்ளது.இக்கோயில் முற்றிலும் சிதிலமடைந்து சேதமடைந்து தற்போது புதிய கோயிலாக கட்டும் அளவிற்கு சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இக்கோயிலில் சுந்தர்ராஜபெருமாள் ஸ்ரீதேவிபூமாதேவி,சவுந்தரவள்ளிதாயார்,லட்சுமி நாராயணன்,விஸ்வக்சேனர்,ராமானுஜர்,மணவாளமாமுனிகள்,கருடாழ்வார்,18ம்படி கருப்பர்,ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறது.மகிழமரம் தல விருட்சமாக உள்ளது.இந்துசமய அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்டகோயிலாகும்.இக்கோயிலின் அமைப்பு தஞ்சாவூர் பெரியகோயிலை போன்று காட்சிதருகிறது.இக்கோயில் ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது.ராஜ ராஜ சோழன் இலங்கைக்கு போர் செய்ய செல்லும் இக்கோயிலை வழிபட்டதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.
முற்காலத்தில் இக்கோயிலில் 6 கால பூஜைநடந்த நிலையில் தற்காலத்தில் ஒரு கால பூஜை நடந்து வருகிறது.
இக்கோயிலில் உள்ள சவுந்தரவள்ளி தாயார் அட்சய லட்சுமி தாயாராக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.அட்சயம் என்றால் எடுக்க எடுக்ககுறையாதது என்று பொருள் அதுபோல அளவற்ற செல்வத்தை தரும் சக்தி பெற்றவள் இத்தல தாயார்.
இத்தகைய சிறப்புமிக்ககோயிலில் கணக்கில்அடங்கா கோயில்களுக்கு உழவாரப்பணி செய்து பிரதோஷம் ராகுகாலபூஜை பைரவ பூஜை மாங்கல்ய பூஜை என பல பூஜைகளை செய்து வரும் அகஸ்திய விஜயம் சார்பில் வரும் 17 08 19 அன்று விஷ்ணுபதி புண்யகால வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
பலநுாறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழிபாடு நடைபெறவுள்ளதாக ஆன்மிக பெரியவர்கள் தெரிவித்தனர்.இக்கோயிலில் உள்ள பெருமாள் தீர்த்தம் சகல கஷ்டங்களையும் நீக்கும் சக்தி வாய்ந்த தீர்த்தமாகும். கோயிலில் காவல் தெய்வமாக உள்ள பழமையான கருப்பர்கோயிலில் உள்ள கருப்பர் குதிரையில் ஒருகாலத்தில் மதுரை சென்று சென்று வந்ததாகவும் இந்த கோயிலை தென் அழகர் கோயில் என்றும் அழைப்பார்கள். மிகப்பழமையான கருப்பர் சுவாமியிடம் பிரார்த்தனை வைத்தால் உடனே பலிக்கும் சக்தி படைத்தவர்.
இறைவன் படைத்த உலகில் மனிதனும் மனிதன் வடித்த சிலைகளில் இறைவனும் இருக்கிறான் என்போம் அதுபோல இங்குள்ள கருடாழ்வார் சிலையில் எட்டுநாகம் இருப்பதுபோல அவர் இருகரம் கூப்பி பெருமாளை வழிபடுவதுபோல அழகான சிற்பம் உள்ளது.தல விருட்சமாக உள்ள மகிழமரத்தின் கீழ் நாக சிலைகள்இருப்பதால் இக்கோயில் ஒரு நாகதோஷ நிவர்த்தி தலாகவும் உள்ளது.கோயில் திருப்பணியின்போது புண்ணிய தலவிருட்சம் இந்தகோயிலில் வைக்க பெருமாள் அருள் ஆசியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சண்டை சச்சரவுகளால் நிம்மதியிழந்தோர்,நோய்வாய்பட்டவர்கள்,செல்வம் தொடர்ந்து தாங்கள் இல்லத்தில் தங்கவேண்டும் என்று நினைப்பவர்களும்,
கடன்தொல்லையால் சிக்கி தவிப்பர்கள் குடும்பத்தில் முன்னோருக்கு திதிக்கொடுக்க தவறியவர்கள்
தோல்நோய்,புற்றுநோய்,வலிப்பு நோய் ஏற்பட்டவர்கள் கெட்டுப்போன குடும்பம் வழிபட மீண்டும் நல்வாழ்க்கை தரும் சக்தி படைத்தவர் சுந்தர்ராஜபெருமாள் இவரை வழிபட நற்பலன் கிட்டுகிறது. இத்தகைய சிறப்பிக்க கோயிலில் நாராயண பட்டாச்சாரியார் குடும்பத்தினர் பரம்பரையாக இறைவனுக்கு தொண்டு செய்து வருகிறார்கள்.விரைவில் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக