திருநின்றவூர் பாக்கம் தான்தோன்றீஸ்வரர் திருப்பணிக்கு நிதிகோருதல்

 திருநின்றவூர் பாக்கம் தான்தோன்றீஸ்வரர் திருப்பணிக்கு  நிதிகோருதல்

சென்னை அருகில் உள்ள திருநின்றவூர் அருகில் பாக்கம் என்ற பெயர்



கொண்ட கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட திருமேனியுடைய ஈசன்  அளவற்ற அருள்பாலித்துவரும் அபிராமி அம்மை உடனுறை  தான்தோன்றீஸ்வரர்கோயில் உள்ளது.இக்கோயிலில் முற்றிலும் திருப்பணி செய்ய ஏற்பாடு செய்து முதற்கட்ட மதிப்பீடாக ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது....இருப்பினும் சிவபக்தர்கள் மற்றும் சிவதொண்டர்களின் ஆதரவோடு பொருள் உதவியோடு பணிகள் நிறைய செய்யும் நிலையில் தற்போது நந்திமண்டபம் அம்பாள் சன்னதி உட்பட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ சன்னதிகளும் பணிகள் நடைபெறவேண்டியநிலையில் பாதியாக  பணிகள் நிறைய நடக்கவேண்டிய நிலையில்  உள்ளது.எனவே சிவதொண்டர்கள் செல்வந்தர்கள் இந்த திருப்பணி நிதி உதவிசெய்து தான்தோன்றீஸ்வரரின் அருளுக்கு பாத்தியமாகும்படி திருப்பணி நிர்வாகிகள் வேண்டுதல் வைக்கிறார்கள்.

ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலனை மேற்கு நோக்கி அருள்பாலித்துவரும் தான்தோன்றீஸ்வரரை வழிபட பலன் கிட்டும். குழந்தை செல்வம்வேண்டுவோர்,புதிய இடம் மற்றும் புதிய வீடுகட்ட நீணடநாட்களாக நினைத்துவரும் அன்பர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைய காத்திருக்கும் அன்பர்கள் இத்தல ஈசனை வழிபட நற்பலன் கிட்டுகிறது.

இந்த திருக்கோயில் திருப்பணி அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருத்தல திருப்பணி அறக்க்கட்டளை மூலம் சிவ பொன்னையன் சிவ வேலு மற்றும் சிவதொண்டர்கள் சிவனடியார்கள் தாங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளனர்.


கோயில் செல்ல சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி சென்று அங்கிருந்து திருநின்றவூர் சென்று அருகில் உள்ள பாக்கம் கிராமத்தை அடையலாம்.

கருத்துகள்



  1. திருச்சிற்றம்பலம்,

    அருமையானப் பணி, இவ்விதமான பதிவுகள். அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்கு சிவநேய அன்பர்கள் உதவ்வேண்டும்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக