திருவண்ணாமலை ஓகூர் ஓத்தாண்டேஸ்வரர் கோயில் திருப்பணி
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தாலுகா ஓகூர் கிராமத்தில் பழமையான ஒத்தாண்டேஸ்வரர் கோயில் உள்ளது
இக்கோயில் முற்றிலும் சிதிலடைந்து திருப்பணி செய்யும் நிலையில் இருந்த நிலையில் ஓகூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திருப்பணி குழுவினர் இணைந்து தற்போது முழுவீச்சில் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.
முதற்கட்டமாக கர்ப்பகிரகம் உட்பட ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி இதுவரை ரூ.2 லட்சம் மதிப்பிலான பணிகள் நடந்துமுடிந்துள்ளது இன்னமும் நிறைய பணிகள் செய்யவேண்டிய நிலையில் உள்ளது.
இக்கோயில் தொண்டை மண்டல நன்னாட்டில் புலத்தியாபுரம் என்னும் போளுர் நகருக்கு கிழக்கே ஓகூர் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில் 1500 ஆண்டுக்கு மேல் பழமையான திருக்கோயிலாகும்.சிதிலமடைந்த இத்திருக்கோயிலை கிராமபொதுமக்கள் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய இருப்பதால் அனைத்து ஆன்மிக பொதுமக்களும் தாங்களால் இயன்ற பொருள் மற்றும் பண உதவி செய்து இத்திருக்கோயிலை சிறப்பாக அமைக்க திருப்பணி குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
பஸ் ரூட் திருவண்ணாமலை மாவட்டம் போளுர் பஸ் நிலையத்தில் இருந்து வேலுார் செல்லும் சாலையில் 7 கி.மீ துாரத்தில் ஓகூர் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் பழமையான ஒத்தாண்டேஸ்வரர் கோயில் உள்ளது.
இதுவரை 60. பேர் பார்த்துள்ளனர்
பதிலளிநீக்குகோவில் பற்றிய தகவல் சிறப்பக உள்ளது நன்றி
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்கு