கும்பகோணம் அருகில் உள்ள சோழபுரம் கைலாசநாதர் கோயிலில் மார்த்தாண்ட சனீஸ்வரருக்கு கரிநாள் கஜபூஜை

உலகத்தில் 400 வருடங்களுக்கு  ஒருமுறை வரு் கரிநாள்..உங்கள் கஷ்டம் தீர வழிபாடு

கும்பகோணம் அருகில் உள்ள சோழபுரம் கைலாசநாதர் கோயிலில் மார்த்தாண்ட சனீஸ்வரருக்கு கரிநாள் கஜபூஜை





ஒவ்வொருவரும் தாங்களின் பிறந்த நட்சத்திரத்தன்று உரிய ஆன்மிக பெரியவர்களின் வழிகாட்டுதலோடு ஏழை பிராமணர்கள் மூலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தவேண்டும் அவ்வாறு நடத்தும்போது அவரது ஆயுள் கூடும்.பிரம்மாவை வழிபடவேண்டும்.பலா மரம் தலவிருட்சமாக உள்ள கோயில்களில் வழிபாடு செய்யவேண்டும்.

ராகு காலம் எமகண்டம் இல்லாத ஊர்களான திருக்கடையூர்,எண்கண் ஆகிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள ஆச்சார்ய முறைப்படி கோயிலில் வழிபாடு செய்யவேண்டும்.சனீஸ்வர கடவுள் நற்பலன் தரக்கூடியவர் அவரை திட்டக்கூடாது.தண்ணீர் பஞ்சம் ஏற்படகாரணம் நாம்முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வருட பூஜைகளை சரிவர செய்யாமல் போனதே காரணம்.

ஆறு,கடல்,புண்ணியநதி போன்ற நீர்நிலைகளில் நம்முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும்கலந்து பூஜை செய்யும்போது அந்த தண்ணீர் பித்ருலோகத்தை அடைந்து அங்கு நீர் அதிகமாவதால் பூமியில் சுபிட்சமாக அனைவரும் இருக்க நல்ல மழை பெய்கிறது.பித்ரு காரியங்கள் தாமதம் ஏற்படும்போது மழை குறைகிறது.
இன்று காக்கைக்கு உணவளிக்கவேண்டும்.

 எண்ணெய் தானம் கொடுக்கவேண்டும்,படுக்கையில் நோயாளியாக இருப்பவர்கள்,பொய்பேசியவர்கள்,பிறரைதிட்டியவர்கள்,நாள்நேரம் பார்க்காமல் நல்ல காரியங்கள் செய்தவர்கள் சனீஸ்வரனை வழிபட நற்பலன் கிட்டுகிறது.புனித நீராடலும் தர்ப்பணம் செய்வதும் நற்பலன் தரும் காரியங்கள் ஆகும்.


கும்பகோணம் அருகில் உள்ள சோழபுரத்தில் கரிநாள் கஜபூஜை நடந்தது.கும்பகோணம் அருகில் கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சோழபுரத்தில் பழமையான கைலாசநாதர் உடனுறை சிவபூரணி அம்பாள் கோயில் உள்ளது இக்கோயிலில் உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட சனீஸ்வரருக்கு கரிநாள் கஜபூஜை பைரவபுரம் அறக்கட்டளை சார்பில் நடந்தது.
சோழபுரத்தில் உள்ள தீர்யம்பகநேத்ர லிங்கமூர்த்தி முக்கண்மாலீஸ்வரர் சிவபூரணி கோயிலில் மார்த்தாண் சனீஸ்வரருக்கு  கஜபூஜை கோபூஜை நடந்தது. முன்னதாக கோபூஜையும் அதனை தொடர்ந்து சிறப்பு ஹோமமும்,அபிஷேகமும் கஜபூஜையும் தொடர்ந்து தீபாரதனையும் நடந்தது. சனீஸ்வர பகவான் ஈஸ்வரபட்டம் பெற்ற தலமாக உள்ளதால் பொங்குசனி,மங்குசனி,தங்குசனி,உட்பட ஜாதக ரீதியாக சனிஸ்வரர் தாக்கத்தில் இருந்து விடுபட இங்கு வழிபட நற்பலன் கிட்டுகிறது.மேலும் சனிக்கிழமை அமாவாசை,கரிநாளில் வழிபடநற்பலன் கிட்டுகிறது.

இக்கோயிலில் வழிபட சிறுநீரக மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் மற்றும் படுக்கையாய் உள்ள நோயாளிகள் மற்றும் நீண்டஆயுள்,கோர்ட் பிரச்னை தீர வழிபட நற்பலன் கிட்டுகிறது. மார்த்தாண்ட சனீஸ்வரருக்கு உரிய கரிநாள் கஜபூஜையை பைரவபுரம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது.




புதிய மலர் செய்திக்காக தகவல் தந்தவர் அகஸ்திய விஜயம் வெங்கட்ராம சித்தர் அருளாணைப்படி  அவரது  சீடர்    திரு கோபாலன் அவர்கள் சென்னை

கருத்துகள்