ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.





ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


ஆவுடையார்கோயிலில் மிகப்பழமையான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயில் பாண்டியமன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில் திருவாவடுதுறை ஆதீனக்கட்பாட்டில் உள்ள கோயில்.இக்கோயிலில் தான் திருவாசகம் பிறந்தது.இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன திருவிழா,மார்கழி திருவாதிரை திருவிழா சிறப்பாக நடக்கும்.அதன்படி சூன்28ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
28ம் தேதி மாலை மாணிக்கவாசகர் வெள்ளி சிவிகை வாகனத்தில் அரிமர்த்தன பாண்டியனாக காட்சிகொடுத்தார்.

 29ஆம் தேதி காலை வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் நிஜருப காட்சியும்,  இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்ரமணியசுவாமி வீதிஉலாவும்,30ந் தேதி காலையில் வெள்ளிபடிச்சட்டத்தில் முதலமைச்சர் அலங்காரத்திலும் மாலையில் வெள்ளி பூத வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும்

 ஜூலை 1ந் தேதி காலை வெள்ளிபடிச்சட்டத்தில் திரிபுரம் எரித்தகாட்சியும் மாலையில் வெள்ளி கைலாச வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும் மாணிக்கவாசகர் காட்சி கொடுப்பார். தொடர்ந்து ஜூலை 2ஆம் தேதி காலை வெள்ளி சிவிகை வாகனத்தில் சிவபூஜை காட்சியும் மாலையில் வெள்ளி சிவிகை  வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும் 3ஆம் தேதி காலை வெள்ளிபடிச்சட்டத்தில் ஊர்த்துவ தாண்டவ காட்சியும் மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் யானைப் படை தளபதியாக காட்சி கொடுப்பார்.

வரும் நாலாம் தேதி காலை உருத்திராட்ச மணி விமானத்தில் பிட்டு மண்சுமந்த நேர்பட காட்சியும்  மாலையில்  குருத்தோலை சப்பரத்தில் இடப வாகன காட்சியும் 5ஆம் தேதி காலை வெள்ளிபடிச்சட்டத்தில் எல்லாம் வல்ல சித்தர் பெருமான் காட்சியும் மாலையில் திருவாசகத்திற்கு பொருளுரைத்த காட்சியும் இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் மதுரை பெருநன்மாநகர் தன்னில் குதிரைச் சேவகனாக காட்சிகொடுப்பார்.

 தொடர்ந்து ஆறாம் தேதி காலை திருத்தேரும் மாலையில் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் நடராஜர் அலங்காரத்தில் காட்சி கொடுப்பார்

 ஏழாம் தேதி காலை வெள்ளிப்படிச்சட்டத்தில்  பிட்சாடனர் அலங்கார காட்சியும் மாலையில் வெள்ளி ரதத்தில் ராஜ அலங்கார காட்சியும் நடைபெறும் தொடர்ந்து எட்டாம் தேதி மாணிக்கவாசகர் பெருமான் சிவபெருமான் அருளிய உபதேச காட்சியுடன் விழா நிறைவடைகிறது

விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாணபரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி கட்டளை தம்பிரான் சுவாமிகள், நம்பியார்கள்.சிவாச்சாரியார்கள் கோயில் கண்காணிப்பாளர்,மற்றும் திருவாவடுதுறை ஆதினத்தை சேர்ந்த சிவதொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

கருத்துகள்