பாண்டிச்சேரி பாகூர் மூலநாதசுவாமி கோயிலில் உழவாரப்பணி




பாண்டிச்சேரி பாகூர் மூலநாதசுவாமி கோயிலில் உழவாரப்பணி

பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பாகூர் என்ற ஊரில் பழமையான பிரசித்திபெற்ற வேதாம்பிகாசமேத  மூலநாதர் கோயில் உள்ளது

இக்கோயிலில் நர்த்தன விநாயகர்,வரசித்த விநாயகர்,துர்க்கை,தட்சிணாமூர்த்தி,பிரம்மா,பொங்குசனி,சுப்ரமணியர் உள்ளிட்ட பல பரிவார தெய்வங்கள் அருள்பாலி்த்து வருகின்றன.
இக்கோயிலில் கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தென்கயிலாய பக்தி பேரவைக்குட்பட்ட (சிவாங்கா)வின் பாண்டிச்சேரி பக்தி பேரவை சார்பில் உழவாரப்பணி நடந்தது.

 உழவாரப்பணிக்குழு கோயில் உட்பிரகாரம் மண்டபம் ஆகிவற்றினை உரிய பொருட்கள் மூலம் சுத்தம் செய்தும் கோயிலில் பயன்படுத்தப்படும் பித்தளை பொருட்களை சுத்தம் செய்து கோயிலில் உள்ள பூஞ்செடிகள் பகுதிகளை சீர் செய்தும் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.இப்பணியில் ஈடுபட்ட சிவதொண்டர்கள் பணிக்கு பின் சிவனை வழிபாடு செய்தனர்.

கருத்துகள்