அரக்கோணம் திருமாதலம்பாக்கம் திருமாலீஸ்வரர்கோயில் திருப்பணி

*திருமாலீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் திருப்பணி*
அகில உலகையும் காத்து அனைத்து ஜீவன்களுக்கும் வேண்டுவன அறிந்து நமக்கு அருளும் சிவபெருமான், *அரக்கோணம் அருகே அமைந்துள்ள திருமாதலம்பாக்கம்* என்னும் எழிலார்ந்த ஊரில் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேதராய் இத்தலத்தில் திருமாலுக்கு திருக்காட்சி  கொடுத்து  பொன்னிற பொலிவோடு சிறப்பான தோற்றத்தில் நம்மை வசீகரித்து அருள்கிறார்

 *திருமாலீஸ்வரர்* பெருமான். *பழமையும் புராதன பெருமையும்* கொண்ட இத்திருக்கோயில் *சோழர் காலத்தில் வழிப்பட்டதாகும்*. பல நூற்றாண்டுங்கள் கடந்து கடந்த 1996-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு 2008-ம் ஆண்டு 2-வது கும்பாபிஷேகம் நடந்தேறியது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவன் கோயில்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். அவ்வாறு நாம் கும்பாபிஷேகம் நடத்திட சமயம் நெருங்கிவிட்டது.

 கோவிலுக்கு என்று நிரந்தர வருவாயோ / இதர வருவாய் இல்லாத காரணத்தால், அன்பர்கள் சிவநேய செல்வார்கள் துணைகொண்டு நாம் அனைவரும் இணைந்து இந்த மாபெரும் திருப்பணி செய்து மஹா கும்பாபிஷேகம் நடத்திட வேண்டியுள்ளது. எனவே பணம் தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. உங்களால் முடிந்த அளவு திருப்பணிக்கு தேவைப்படும்  பொருள் வாங்கி கொடுத்து திருப்பணி நல்லபடியாக நடந்தேற வழிவகை செய்ய வேண்டுகிறோம்.

 நீங்களும் இப்பணிகளில் இணைந்து நம் பெருமானுக்கு கும்பாபிஷேக வைபவம் நடத்திட அன்புடன் அழைக்கிறோம்.

*தொடர்புக்கு : குமரவேல் 9894342409*

கோவில் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள : www.thirumaleeswarartemple.com


கருத்துகள்