தீராத கஷ்டங்களை தீர்க்கும் தர்ப்பண தேவதைகளை வழிபடும் ஆடி அமாவாசை திதிதர்ப்பண வழிபாடு
திருவண்ணாமலை குரு வெங்கட்ராமசித்தரின் சீடர் கோபாலன் அமாவாசை குறித்து தெரிவித்ததாவது,
ஆடி அமாவசை என்பது தட்சிணாயன காலத்தில் வருவது.இந்த வருடம் ஆடி 15ந்தேதி ஜீலை 31ந்தேதி காலை 11.57க்கு வருகிறது.தொடர்ந்து மறுநாள் காலை 8.41 வரை நீடிக்கிறது.இருநாட்கள் அமாவாசை வருவதால் இது போதாயன அமாவாசை அதாவது ருதுமங்கள அமாவாசையாகும்.
ஒவ்வொரும் அமாவாசை தினத்தில் கிணற்றி,குளத்தில்,ஆற்றில்,குளிப்பதற்கு பதில் கடலில் நீராடவேண்டும்.கடலில் சாதாரண நாட்களில் நீராட கூடாது.அமாவாசை தினத்தில் நீராடுவதால் பித்ருதேவர்களின் அருள்கிடைக்கும்.இதற்கு சமுத்திர ஸ்நானம் கடல் நீராட்டம் என்று பெயர்.
தென்தமிழகத்தில் வேதாரண்யம்,கோடியக்கரை,அகஸ்தியான்பள்ளி,திருப்புல்லாணி,ராமேஸ்வரம் ஆகிய புனித தலங்களில் திதி தர்ப்பணம் செய்து நீராட நற்பலன் கிட்டும்.
ஒருவருக்கு தீராத கஷ்டம் தீர கடற்கரையில் அமாவாசை தினத்தில் திதி தர்ப்பணம் கொடுப்பது நற்பலன் தரும்.இந்த அமாவாசை தினத்தில் நமது வம்சத்தின் 64 தலைமுறைகள் இருந்து இறந்த முன்னோர்கள் நமது வேலையாட்கள் நமது வீட்டு உயிரினங்கள் பசுமாடு உட்பட விலங்கினங்களுக்கு செய்யும் வழிபாடாகும் இதனால் நமக்கு நற்பலன் கிட்டும்.
இந்நாளில் கடலில் நீராடி ஈர உடையை தானம் கொடுக்கவேண்டும்.பெண்கள் வெள்ளை எள் கொண்டு திதி கொடுக்கலாம்.தர்ப்பணம் என்பதில் முக்கிய பங்கு வகிப்பது தர்ப்பை இந்த தர்ப்பையை முறைப்படி கட்டவேண்டும் மேல்பகுதியில் அப்பாவின் முன்னோர்களுக்கும் கீழ்பகுதியில் அம்மாவின் முன்னோர்களுக்கும் வழிபாடு செய்வது என்பது ஐதீகம்.பி்த்தளை செம்பு தாம்பாளம் மூலம் துளசி எள் மூலம் ஆன்மிக பெரியவர்களின் ஆலோசனைப்படி செய்யலாம்.நாம் செல்லும் பகுதியில் புரோகிதர்கள் இல்லா நிலையில் மறைந்த நம் அப்பா தாத்தா பாட்டி ஆகிய பெயர்களை சொல்லி சமர்ப்பயாமி என்று சொல்லி தர்ப்பணம் செய்யவேண்டும். வலது கையில் கட்டை விரல் ஆட்காட்டி விரல் மூடும்போது வரும் பாகம் பித்ரு பாகமாகும் அந்த பாகத்தின்வழியே எள் நீர் விடவேண்டும்.
இந்த தர்ப்பணத்தில் ஆவியால் வெந்த உணவினை படைக்கவேண்டும்.12 வாழைப்பழங்களை பசுமாட்டிற்கு கொடுக்கவேண்டும்.
இவ்வாறு செய்தால் நம்முன்னோர்கள் மகிழ்வடைந்து தர்ப்பண தேவதைகள் மூலம் நமது கஷ்டம் தீரும்......

கருத்துகள்
கருத்துரையிடுக