தோஷம் நீக்கி சுக வாழ்வு தரும் பாமணி நாகநாதசுவாமி

தோஷம் நீக்கி சுக வாழ்வு தரும் பாமணி நாகநாதசுவாமி
திருவாருர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா மன்னார்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது பாமணி கிராமம்.இந்த கிராமத்தின் தான் மிகப்பழமையான அமி்ர்தநாயகி உடனுறை நாகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் முற்காலத்தில் தனஞ்செய மகரிஷி பாம்பு ரூபத்தில் வந்து சிவனையும் அம்பாளையும் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.அதுபோல முற்காலத்தில் காமதேனு பசு இந்த உலகத்தில் முதன்முதலாக வந்து இங்குள்ள இறைவனுக்கு பாலை நேரடியாக மார்காம்பில் இருந்து அபிஷேகம் செய்ததலமாகும்.

இத்தலத்தில் ராகுகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள்,மங்கல்யதோஷம் உள்ளவர்கள் திருமணத்தடையால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இத்தல இறைவனை வழிபட நற்பலன் கிட்டுகிறது.

இங்குள்ள தனஞ்செய மகரிஷிக்கு செவ்வாய்கிழமையன்று வழிபாடு செய்ய கோர்ட் வழக்குகள் தீரும் நமக்கு வந்துசேரவேண்டியது விரைவில் வந்து சேரும்.


இங்குள்ள இறைவனை வழிபடவேண்டும் என்று நமது ஜாதகத்தில் விதி  இருந்தால் மட்டுமே இறைவனை வழிபட நம்மை அழைப்பார்.ஆக இத்தல இறைவனை வழிபடுதல் என்பது அவர் வழங்கும் ஆசியால்தான்.ஐப்பசி மாதம் 1ந்தேதி இத்தல இறைவழிபட்டு தானம் செய்து நமது குடும்பத்தினர் பல தலைமுறைக்கு உணவு பஞ்சமின்றி வாழ்வர்.

தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து திருமணம் செய்ய தோஷம் விலகும் தலம்.பிதுர் சாபம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து தர்ப்பணம் செய்ய அந்த சாபத்தில் இருந்து விலகி நல்வாழ்க்கை வாழ வழி செய்யும் இறைவன் இத்தல இறைவன்.



தகவல் தந்தவர் திருவண்ணாமலை குரு வெங்கட்ராமசித்தரின் சீடர் கோபாலன் சுவாமிகள்.......




கருத்துகள்

கருத்துரையிடுக