இறைவனின் திருவுருவம் மூன்று தலைமுறைகளாக செய்யும் சிற்பி வேல்குமார். மற்றும் சிற்பி கணேஷ்






இறைவனின் திருவுருவம் மூன்று தலைமுறைகளாக  செய்யும் சிற்பி வேல்குமார். மற்றும்  சிற்பி கணேஷ்

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா மாமல்லபுரத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் இவரது மகன் வேல்குமார்(32) இவரும் இவரது சகோதரருமான கணேஷ்(31) என்பவரும் இணைந்து கடந்த பல வருடங்களாகவே சிலைகள் செய்யும் பணி செய்து வருகிறார்கள் இவரது   குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக கடவுளின் திருவுருவங்களை கல்லில் வடிவமைத்து வருகிறார்கள்.

கடவுள் படைத்த உலகில் மனிதன் வாழ்கிறான் மனிதன் வடித்த சிலையில் கடவுள் வாழ்கிறான் என்ற கூற்றுக்கு ஏற்ப சைவம் வைணவம் என பல கடவுளின் இறைவனின் திருவுருவங்களை கல்லில் வடிவமைத்து கோயில்களுக்கு அனுப்பி வருகிறார்கள். இவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே கூட்ரோடு  பூஞ்சேரி என்ற கிராமத்தில் சிவகாமி நகர் பகுதியில்  ஸ்ரீ சுசீலா சிற்ப கலைக்கூடம்   பட்டரை நடத்திவரும் வேல்குமார் மற்றும் கணேசுக்கு   இந்தியாவின் பல பகுதியில் இருந்து சுவாமி சிலைகள்செய்ய சிற்பம் வடிவமைக்க ஏதுவான கல் வரவழைக்கப்படுகிறது.

அதுபோல தமிழகம் மட்டுமின்றி தமிழகம் அருகில் உள்ள பல மாநிலங்களுக்கும் பிரசித்தி பெற்ற கடவுள் உருவங்களை செய்து அனுப்பிவரும் பணியை செய்துவருகிறார்.இவரது தயாரிப்பில் 10 அடி விநாயகர் சிலை ஆந்திராவில் கடப்பாபகுதிக்கும் அதுபோல பிரசித்தி துரக்கை சிலைகள் பல ஊர்களுக்கு செய்து அனுப்பி இருக்கிறார்.

குறிப்பாக விநாயகர் பெருமாள் பாலமுருகன் உட்பட பல்வேறு இந்து தெய்வங்களின் சிலைகள் அதிக அளவில் தயார் செய்து கேட்கும் பக்தர்களுக்கு அந்தந்த கிராமங்களுக்கு அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வருகிறார்.

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி குறைந்ததொகையில் பக்தர்கள் விரும்பும் வடிவில் கடவுள் சிற்பங்களை உருவாக்கி கொடுப்பது இவரது பணியாக உள்ளது.

இவரை தொடர்புகொள்ள  9677229133

கருத்துகள்