சுவாமியின் திருவுருவங்களை சுதை வடிவில் செய்யும் சிற்பி முருகராஜ்


சுவாமியின் திருவுருவங்களை சுதை வடிவில் செய்யும் சிற்பி முருகராஜ்

மனிதன் உலகில் தோன்றிய பின்னர் கடவுள் வழிபாடு என்பது தொன்று தொட்டு இருந்துள்ளது.இயற்கை வழிபட்ட மனிதன் படிப்படியாக உருவ வழிபாட்டினை மேற்கொண்டான். சிலை வடிவில் தெய்வங்களை வழிபட்ட மனிதன் கால போக்கில் நவீனத்தால் கற்சிலைகளில் இறைவனை வடிப்பதுபோல இறைவனின் அருளால்  சுதைகளாகவும் செய்யும் ஆற்றல் பெற்றான் மனிதன்.

இந்நிலையில் தற்போது சுதை சிற்பங்களை முழுநேர தொழிலாக செய்துவரும் முருகராஜ் குறித்து பார்ப்போம்...
 தென்காசி மாவட்டம் விகே புதுார் தாலுகா சுரண்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மகன் முருகராஜ்(43) இவர் கடந்த 25 வருடங்களாக சுதை சிற்பங்கள்  செய்துவரும் பணி செய்து வருகிறார்.





கடவுளின் வடிவினை கல்லால் செதுக்கி வழிபடுவது ஒரு வகை. சில கிராமங்களில் முற்காலம் முதலே சுதையாக வழிபடுவது மற்றொரு முறை.சுதை என்பது சிமெண்ட் மணல் செங்கல் கம்பி மூலம் மேலும் சில கட்டுமான பொருட்களை கலந்து கற்சிலைபோல சுதையாக சுவாமி வடிவமைத்து அதற்கு வண்ணம் தீட்டி வழிபாடு செய்வது சுதை வழிபாடாகும்.

ஆரம்பகாலத்தில் கோயில் படங்கள் சுவாமி படங்கள் வரையும் ஆர்வம் கொண்ட முருகராஜ் ஒரு கால கட்டத்தில் சுதையை முழுநேரமாக கற்றுக்கொண்டு அற்புதமான சிலைகளை செய்துள்ளார்.இவர் ஆலடிப்பட்டி பத்ரகாளியம்மன் சுதை,சுரண்டை திருமலைக்காளியம்மன்,அருணாதேரி அஷ்டலட்சுமி தெப்பம் சுரண்டை குளத்துார் அய்யனார்கோயில்,ஆகிய கோயில்களில் இவரது முழு சிற்ப வேலைப்பாடுகளின் திறமையை அற்புதத்தை இறைவன் வடிவில் காணலாம்

 இவரது மகன் இருவர் வேங்கடரமணன் அருணகிரி ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அரசினர் சிற்பகலை மற்றும் கட்டிடக்கலைக்கல்லுாரியில்  கற்சிற்பம் குறித்தும் சுதை சிற்பம் குறித்து பயின்று வருகிறார்கள்.தன்னை போலவே தனது பிள்ளைகளும் இறைவன் பணியை செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த படிப்பியை பயிற்சியை கற்றுக்கொள்ள அனுப்பிவைத்துள்ளார்.

தொடர்புக்கு சிற்பி முருகராஜ் 93449 02449

கருத்துகள்