கோயில்களுக்கு மணி செய்யும் மணி முருகன்


கோயில்களுக்கு மணி செய்யும் மணி முருகன்
மனிதன் தோன்றியது முதல் கோயில் வழிபாடு என்பது தொன்று தொட்டு நடந்து வரும் வழிபாடாகும்.கோயில் என்றால் அடுத்த வார்த்தை மணிதான்.கிராமங்களில் கோயில் மணி அடித்து விட்டது என்ற வார்த்தையுடன் பணிகள் தொடங்குவார்கள் நல்ல காரியம் பேசும்போது மணி அடித்தால் நல்ல சகுனம்.

இறைவழிபாட்டில் மணி என்பது இறைவனோடு பிரி்க்க முடியாத ஒன்று.இப்படியாக மணியை பற்றி மணிக்கணக்கில் நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.இப்போது திருவாருர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கோவிந்தகுடி  ராமலிங்கம் சுலோசனா தம்பதியின் மகன் மணிமுருகன்(43) என்பவர் குறித்து பார்ப்போம்.


இவர் கடந்த 25 வருடமாக சுவாமிமலையில் கோயில் மணி தயாரிக்கும் வார்பட கலைக்கூடம் வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு சித்ரா என்ற மனைவியும் லோகேஸ்வர் ஹரிஸ்வர் என்ற மகனும் உள்ளனர்.இவர் கடந்த 25 வருடங்களாக கோயில் சர்ச்,புத்தர்கோயில் உட்பட தமிழகம் இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் மணி தயாரித்து அனுப்பிவருகிறார்.











பராம்பரிய முறைப்படி மணியை இவர் தயாரிப்பதால் இவரை மாஸ்டர் ஆப் கிராப்ட்ஸ்மேன் என்று மணி வாங்கிசெல்பவர்கள் பாராட்டும் அளவிற்கு இவரது சேவை உள்ளது.

தற்போது ஒரு கிலோ எடையுள்ள மணி ரூ.2 ஆயிரத்து 200க்கு விற்கும் இவர் மணி தயாரிப்பில் காப்பர் 80 சதவீதமும்,வெள்ளியியம் 20 சதவீதமும் சேர்த்து செய்வதால் இவர் கை வண்ணத்தில் தயாராகும் மணி நல்ல ஒசையுடன் இருக்கும்.

இவர் தயாரிப்பில் உருவான மணி ஒசை கேட்டு அந்த ஒசை போல மணி எங்களுக்கு வேண்டும் என்று தேடிவந்து ஆர்டர் செய்து பெற்றுவருகிறார்கள். ஒரு கிலோ முதல் ஒன்றரை டன் எடை வரை இவர் மணி செய்யலாம் என்று தெரிவிக்கும் இவர் பல நுாறு கிலோ எடையுள்ள மணிகளை தயாரித்து அனுப்பி கொண்டே இருக்கிறார்.இவரை பாராட்டுவோம். இவர் தயாரிக்கும் மணிகள் கோயில் மணிகள் ஓம்கார நாத ஓசையுடன்  இருக்கும்




கருத்துகள்