பாவம் போக்கும் கார்த்திகை அமாவசை நீராடல் வழிபாடு

பாவம் போக்கும் கார்த்திகை அமாவசை நீராடல் வழிபாடு



திருவண்ணாமலை குரு வெங்கட்ராமசித்தரின் சீடர் கோபாலன் கார்த்திகை நீராடல் குறித்து கூறியதாவது

எந்த வருடமும் இல்லாத சிறப்பு இந்த வருடம் கார்த்திகை மாதத்திற்கு உள்ளது.கார்த்திகை அமாவாசை முதல் மார்கழி அமாவாசை வரை காவிரி கோயில் குளங்கள் ஏரிகள் தீர்த்தக்குளங்கள் நீர் நிலைகளில் நீராட நற்பலன் கிட்டும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் ஆனவர்களுக்கு குழந்தை பாக்யமும் கிட்டும்.உங்கள் ஊருக்கு அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடினால் கூட நற்பலன் கிட்டும்.இந்த நீராடல் வைபவத்தால் பல ஜென்ம பாவங்கள் நீங்கும்.பால் மரங்களான ஆலமரம் பலாமரங்களை வலம் வர 64 தலைமுறைகள் நாம் செய்த பாவங்கள் அகலும்.


ஒரு காலத்தில் திருவிசநல்லுாரில் ஸ்ரீதர அய்யாவாள் என்ற பெரியவர் வாழ்ந்தார்.அப்போது ஒருநாள் தன் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க உணவு தயாரித்தார் தர்ப்பணம் கொடுக்க பிராமணர்கள் உரிய காரியங்களை செய்து கொண்டிருக்கும்போது சோதனையாக ஒரு ஏழை பசி என்று சாப்பாடு கேட்க தர்ப்பணத்திற்கு தயாரித்த உணவை கொடுத்தார்.அதை கண்ட பிராமணர்கள் கோமடைந்து காசியில் போய் நீராடி வந்தால்தான் மீண்டும் நாங்கள் தர்ப்பணம் செய்வோம் என தெரிவிக்கவே மனம் நொந்து வேதனைபட்டு கடவுளை வேண்ட அவர் வீட்டில் உள்ள கிணற்றில் கங்கை பொங்கியது.


அத்தகைய கங்கை பொங்கிய ஊரில்  புனித நீராடல் நற்பலன்களை தரகூடியது.ஆக மொத்தம் உங்கள் வேண்டுதல் கோரிக்கை நிறைவேற கண்திருஷ்டி அகலநோய் நீங்க புனித தீர்த்தங்களில் நீர்நிலைகளில் கார்த்திகை அமாவாசை முதல் மார்கழி அமாவாசை வரை நீராடல் செய்ய நற்பலன் கிட்டும்.

கருத்துகள்