அனந்தமங்கலம் கோயிலில் மதுரை அன்பர்கள் உழவாரப்பணி
நாகை மாவட்டம் அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி வாசுதேவபெருமாள் கோயிலில் மதுரை அன்னை மீனாட்சி உழவாரப்பணி குழு சார்பில் உழவாரப்பணி நடந்தது.
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அனந்தமங்கலம் ஊரில் பழமையான ராஜகோபாலசுவாமி வாசுதேவபெருமாள் கோயில் உள்ளது.இக்கோயிலில் உற்சவராக ராஜகோபாலசுவாமியும் அவருடன் பாமா ருக்மணியும் மற்றும் மூலவருடன் ஸ்ரீதேவி பூதேவி செங்கமலவல்லி ஆகிய தெய்வங்களும் மேலும் பிரசித்தி பெற்ற திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரும் அருள்பாலி்த்து வருகின்றன.
இக்கோயில் பற்றி முற்காலத்தில் ராமர் இலங்கை யுத்தம் முடிந்து வந்தபோது அவரை சந்தித்த நாரதர் ராவணனின் அரக்கர்களை அழிக்க ராமரை கேட்க அவரும் தற்போது நான் அழிக்க செல்லமுடியாது காரணம் நானும் லட்சுமணரும் அயோத்திசெல்ல வேண்டிய நிலையில் உள்ளதால் அரக்கர்களை அழிக்கும் பணிக்காக நான் ஆஞ்சநேயரை அனுப்பிகிறேன் எனக்கூறி ராமரால் அனுப்பட்ட 10 கரங்கள் மற்றும் 3 கண்கள் கொண்ட திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ள திருக்கோயிலாகும்.
இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி,வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது கிரகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வடைமாலை சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை போல மற்ற கோயில்களில் காண்பது அரிதானதாகும்
இத்தகைய சிறப்புமிக்க கோயிலை நாமும் தரிசனம் செய்வோம். இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் மதுரை அன்னை மீனாட்சி உழவாரப்பணிக்குழு(ராமகிருஷ்ணமடம் திருப்பரங்குன்றம்) தலைவர் சண்முகம் சுவாமிகள் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் கோயிலில் உழவாரப்பணி செய்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக