கன்னியாகுமரி மாவட்டம் சசீந்திரம் சிவனடியார் திருக்கூட்டம்



கன்னியாகுமரி மாவட்டம் சசீந்திரம் சிவனடியார் திருக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் சிவனடியார் திருக்கூட்டம் கடந்த 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .இதன் நோக்கம் சிவன்கோயில்களில் உழவாரப்பணி செய்வதே நம் கடமை என்ற  நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது சுசீந்திரம் நகரை சுற்றியுள்ள சிவதொண்டர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தற்போது உழவாரப்பணியில் தாங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள்.








இந்த சுசீந்திரம் சிவனடியார்  திருக்கூட்டத்தின் உழவாரப்பணிக்குழு  தலைவராக சிவ அ. முருகேசன் செயலாளராக சுதை சுந்தர் பொருளாளராக முத்துராமலிங்கம் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 2012ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் இதுவரை நிறைய கோயில்களில் உழவாரப்பணி சுத்தப்படுத்தும் பணி  கோயில்களில் சிவதொண்டு செய்துள்ளனர்.இந்த திருக்கூட்டத்தில் கோயிலை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி திருகூட்டத்தில் சிவனருளால் கோயில்களில் கோபுரங்களில் இருக்கும் இறைவனின் திருவுருவமான சுதைகளை செய்யும் அன்பர்கள் கட்டுமானப்பணி செய்யும் கொத்தனார் வெளிச்சத்தினை சரியாக தருவிக்கும் மின்பணியாளர் கண்களை குளிர்ச்சியூட்டும் பணி செய்யும் வர்ணம் தீட்டுபவர்கள் உழவாரப்பணிக்கு செல்லும்போது பணி செய்து உழைத்து களைத்தால் உணவு உண்ண இந்த குழுவில் நல்ல சமையல் செய்யும் அன்பரும்  என பலரும் ஆன்மிக உணர்வுடன் இருப்பதால் இவர்கள் பணி மகத்தானதாக உள்ளது.

கோயில் உழவாரப்பணிக்கு எவ்வித கட்டணமும் இன்றி இவர்கள் செலவிலேயே சென்று கோயில் பணிகளை செய்து வருகிறார்கள்.மிகப்பழமையான கோயில்களில் உழவாரப்பணி செய்வது மட்டுமின்றி திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் குடமுழுக்கு நேரத்தில் சுவாமி சிலைகளுக்கு கீழ் யாகவேள்விக்கு பின்னர் உரிய யந்திரம் வைத்து சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் சிலைக்கும் பீடத்திற்கும் நடுப்பகுதியில் சிவப்பாக தெரியும் அஷ்டப்பந்தனம் எனப்படும் மருந்து சாற்றும் பணியையும் இவர்கள் எவ்வித கட்டணமும் இன்றி செய்து வருகிறார்கள்.

இதில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ள நிலையில் அரிய பல பணிகளை செய்துள்ளார்கள்.நாம் பிறந்த உலகில் நம்மை உருவாக்கிய கடவுளுக்கு ஏதாவது ஒன்றினை நாம் செய்தாக வேண்டும் என்ற நோக்கில் பணி காலம் போக விடுமுறை நேரத்தில் இறைப்பணி செய்து வருவதை நாம் பாராட்டுவோம் இவர்களுக்கு இறைவனின் முழு அருள் உண்டு

 உழவாரப்பணி செய்ய தொடர்புக்கு சுசீந்திரம் சிவனடியார் திருக்கூட உழவாரப்பணிக்குழு தலைவர் முருகேசன் 94874 11700

கருத்துகள்

கருத்துரையிடுக