கும்பாபிஷேக வர்ணணை செய்யும் புவனகிரி தங்க.அன்பழகன்

கும்பாபிஷேக வர்ணணை செய்யும்
புவனகிரி தங்க.அன்பழகன்

கடலுார் மாவட்டம் புவனகிரி தாலுகா பெருமாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் அன்பழகன்(50) தங்க அன்பழகன் என்று அனைவரால் அழைக்கப்படும் இவர் தனது ஆரம்ப கல்வியை ஆதிவராக நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் மேல்நிலைக்கல்வியை புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார்.









தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலம் எம்ஏ எம்பில் பயின்ற இவர் தற்போது கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது கோயில்களின் சிறப்பு தெய்வத்தின் சிறப்பு யாகவேள்வியில் என்ன சிறப்பான பூஜைகள் செய்யப்படுகிறது கும்பாபிஷேகம் நடைபெறுவதால் உலகில் நடைபெறும் நல்ல காரியங்கள் குறித்து தொடர் வர்ணணை செய்யும் பணி செய்து வருகிறார்.

இவர் தனது வர்ணணைகளை புவனகிரி செல்வவிநாயகர் கோயில் சாமுண்டீஸ்வரி கோயில் வடலுார் வள்ளலார் கோயில் வெள்ளியம்பலம் கோயில் ஆகியவற்றில் செய்துள்ளார் இவர் இந்துக்கள் கோயில் வழிபாடு செய்யும் முறையில் சைவம் வைணவம் என்ற இரு வழிபாட்டில் சைவம் சார்ந்த சிவன் அம்பாள் முருகன் விநாயகர் கோயில்களுக்கு கும்பாபிஷேக வர்ணணை பணிகளை செய்து வருகிறார்.

இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் அமுதுஈஸ்வரர் என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். தாங்கள் ஊரில் குடமுழுக்கு கும்பாபிஷேகம் தொடர்பான வர்ணணை பணிகளுக்கு அழைத்தால் வந்து சிவனருளால் முழு மனதிருப்தியுடன் செய்து தருவார்.

தொடர்புக்கு தங்க அன்பழகன் 9790529760

கருத்துகள்