குழந்தை செல்வம் தரும் சென்னியமங்கலம் சிவபெருமான்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா திப்பிராஜபுரம், சென்னிய மங்கலம் கிராமத்தில் அருள்பாலிக்கும் சுயம்பு லிங்கமாக அருள்புரியும் இரட்டை லிங்கேஸ்வரர் ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோயில் குழந்தை பாக்யமருளும் தலம்.
தல விருட்சமாக வில்வமரமும் அத்துடன் அரசமரமும் தான்தோன்றி மரமாக இணைந்துள்ளது. குழந்தை செல்வம் வேண்டுவோர் இரட்டை லிங்கேஸ்வரருக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து உரிய வழிபாடுகள் செய்ய நற்பலன் கிட்டுகிறது.
இவ்வாலயத்தில் தினசரி மதியம் 12 மணி அளவில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
வழிபாடு மற்றும் கோயில் தொடர்புக்கு :
சிவ சங்கர்
செல் நம்பர்: 9443086587 8124247647

சோழவள நாட்டில் காவிரியின் வட பாலும் தென் பாலும் பாடல் பெற்ற தலங்கள் உள்ளது. திருக்குடந்தைக்கு தென்பாலும் குரு ஸ்தலத்திற்கு வடபாலும் சென்னிய மங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இங்கே திருமலைராஜன் ஆற்றுக்கும் முடிகொண்டான் ஆற்றுக்கும் நடுவில் உள்ள சிற்றூர் சென்னிய மங்கலத்தில் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகிய விளங்கிவரும ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஸ்ரீமீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் ஆலயம் (குழந்தை பாக்கிய பரிகார ஸ்தலம்)இரட்டை லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரண்டு சிவலிங்கம் மற்றும் இரண்டு அம்பாளையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.
அருணாச்சலேஸ்வரர் இடது கையில் உடுக்கையும் சூலமும் வைத்திருப்பது போல காட்சி தருகிறார். இரண்டு சிவலிங்கத்திற்ககும் ஒரே நந்தி காட்சியளிக்கிறார். சப்தமாதாக்கள் மற்றும் நவகிரகங்கள் தம்பதி சமேதர்களாக மிகவும் சிறப்பாக காட்சியளிக்கின்றார்.
தல விருட்சமாக வில்வமரமும் அத்துடன் அரசமரமும் தான்தோன்றி மரமாக இணைந்துள்ளது. குழந்தை செல்வம் வேண்டுவோர் இரட்டை லிங்கேஸ்வரருக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து உரிய வழிபாடுகள் செய்ய நற்பலன் கிட்டுகிறது.
இவ்வாலயத்தில் தினசரி மதியம் 12 மணி அளவில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
வழிபாடு மற்றும் கோயில் தொடர்புக்கு :
சிவ சங்கர்
செல் நம்பர்: 9443086587 8124247647
கருத்துகள்
கருத்துரையிடுக