தேடி சென்று வீதியில் இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஆதிசிவன் பவுண்டேசன் அகத்தியர் அன்னதானகுழு.
மனிதனாக பிறந்தவருக்கு வாழ்வில் இன்பமும் துன்பமும் சிவனால் நிர்ணயிக்கப்பட்டபடி நடந்து வருகிறது. அவனருளால் உலகம் இயங்கி வருகிறது. இவ்வுலகில் பல முன் கர்ம வினையால் ஒவ்வொரும் ஒரு பிறப்பெடுத்து பல இன்ப துன்பங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
துன்பங்களில் இருப்பவருக்கு எவ்வித எதிர்பார்ப்பும இன்றி உதவி வேண்டிய நிலையில் இருப்பவர்கள் நாம் அனைவருமே இந்நிலையில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வருமான நோக்கம் இன்றி சிவன் செயலே நம் செயல் அவன்பால் பற்றுடன் நாம் நடந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் சென்னை மீஞ்சூர் பகுதியில் உள்ள ஆதிசிவன் பவுண்டேசன்(ஏஎஸ்எ ஃப்) அகத்தியர் அன்னதான குழு செயல்பட்டு வருகிறது.
இக்குழு சார்பில் மீஞ்சூர் பகுதியில் தெருக்களில் ஆதரவற்று தன் நிலை என்ன வென்று தெரியாமல் பசியுடன் சுற்றி திரியும் நபர்களுக்கு ரயில்வே ஸ்டேசன் பகுதி,பஸ் ஸ்டாண்ட்,புறவழிச்சாலை பகுதி என தேடி தேடி சுற்றி திரிபவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அன்னதானகுழு சார்பில் தயாரிக்கப்பட்ட உணவினை வழங்கி பலகோடி புண்ணியங்களை ASF அகத்தியர் அன்னதானக்குழு செய்து வருகிறது.
மனிதனுக்கு வரும் நோய்களில் கொடிய நோய் பசிதான் முதல். இந்த பசி வந்துள்ளதை அறியாமல் அறியாமையால் சுற்றி திரியும் ஆதரவற்றவர்களுக்கு பெருமான் கட்டளைக்கிணங்க உதவி செய்கிறோம் என்று முழு பொறுப்பு எடுத்து அன்னதானம் செய்து வரும் ASF அகத்தியர் அன்னதான குழு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் செயல்பட சிவனருள் புரியட்டும்
மேலும் இவர்களை தொடர்புகொள்ள 8778191433 / 8925457595
அன்பர்களுக்கு செய்தி குறித்து தாங்கள் கருத்துக்களை செல் நம்பருடன் எண்டர் யுவர் கமெண்ட் பகுதியில் பதவிடவும்.....
ஓம் நமச்சிவாய
பதிலளிநீக்கு