கடலுார் மாவட்டம் மேல்புவனகிரி வேதபுரீஸ்வரர் கோயிலில் கடலில் தீர்த்தவாரி நடந்தது.

 கடலுார் மாவட்டம் மேல்புவனகிரி வேதபுரீஸ்வரர் கோயிலில் கடலில் தீர்த்தவாரி நடந்தது.


கடலுார் மாவட்டத்தில் புவனகிரி தாலுகாவில் மேல்புவனகிரி பகுதியில் பிரசித்தி பெற்ற மிக மிக பழமையான மீனாட்சி உடனுறை வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் வேதபுரிவிநாயகர்,தட்சிணாமூர்த்தி,நவக்கிரகங்கள் துர்க்கை,சூரியன் சந்திரன் பைரவர்,முருகர்  உட்பட பல தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன.





இக்கோயில் சோழர்கால அமைப்பில் உள்ள கோயிலாகும்.பரசுராமருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த தலமாகவும்,சிதம்பரம் கோயிலுக்கு முற்பட்டதாகவும் செவிவழி செய்திகள் தெரிவிக்கிறது. அஸ்தநட்சத்திரத்திற்கு உரியோர் வழிபட்டு பலன் தரகக்கூடிய  பரிகார தலமாகவும் உள்ளது.






இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி நடக்கும் அதன்படி நடந்த விழாவில் கோயிலில் உள்ள மீனாட்சி,வேதபுரீஸ்வரருக்கு உரிய அபிஷேகம் செய்து அதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவ தொண்டர்கள் ஒரு வாகனத்திலும் உற்சவ மூர்த்தியை ஒரு வாகனத்திலும் வைத்து சிவ புராணம் பாட மேல்புவனகிரியில் இருந்து புறப்பட்டு  கோயிலில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் கடலுார் மாவட்டம் கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது .தீர்த்தவாரி விஷேசங்களை ஸ்ரீதர் குருக்கள் செய்தார். தீர்த்தவாரி மற்றும் கோயில் வழிபாடுகளில் சிவதொண்டர்கள் ஆன்மீக பெரியவர்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.










வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள கலந்து கொண்டனர்.

தகவல் தந்தவர் சிவதொண்டர் தங்க அன்பழகன்  9790529760

கருத்துகள்