தென்காசி வாகைக்குளத்தில் சிவன்கோயில் கட்டுமானப்பணியில் சுசீந்திரம் சிவனடியார் திருக்கூடத்தினர்.





தென்காசி வாகைக்குளத்தில் சிவன்கோயில் கட்டுமானப்பணியில்  சுசீந்திரம்  சிவனடியார் திருக்கூடத்தினர்.

தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் தாலுகாவில் வாகைக்குளம கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஆன்மிகசிறப்பு மிக்க வரலாற்று சிறப்புமிக்க காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது

இக்கோயிலின் ஒருபக்க மதில்சுவர்(சுற்றுசுவர்) சேதமடைந்த நிலையில் அந்த சுற்றுசுவரை கட்டதேவையான கட்டுமான பொருட்கள் அக்கோயிலில் வழிபாடு செய்யும் சிவதொண்டர்கள் ஏற்பாடு செய்தனர்.



இந்த  நிலையில் அந்த கட்டுமானப்பணியை சுற்றுசுவர் அஸ்திவாரம் எடுத்து சிமெண்ட் கலவை செய்து குவித்து கிடந்த கற்களை ஒரு இடத்தில் இருந்து துாக்கி வந்து அதை முறையாக அடுக்கி கலை நயத்துடன் பழைய மதில்சுவர் போல சுற்று சுவர் கட்டும் பணியில் சுசீந்திரம் சிவனடியார் திருக்கூடத்தின் சார்பில் பணி நடந்து வருகிறது




இந்த பணி அதன் தலைவர் முருகேசன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் தாங்கள் சொந்த செலவில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து வாகனத்தில் புறப்பட்டு வந்து இரு நாட்கள் தங்கி சுமார் 90 கி.மீ துாரத்தில் இருந்து கடந்து வந்து சிவ தொண்டு செய்து வருகிறார்இதற்கான பணிக்கு எவ்வித ஊதியமும் பெறாமல் சிவதொண்டே சிறந்த தொண்டு அவனுக்கு உழைக்க பணி செய்யவே நாம் இந்த உலகில் பிறந்திருக்கிறோம் என்ற நோக்கில் பணி செய்து வருகிறார்கள்.அவர்களை பாராட்டுவோம் சிவன் அருள் அவர்களுக்கு முழுமையாக கிடைக்க சிவனை வேண்டுவோம்.









உழவாரப்பணி செய்ய தொடர்புக்கு சுசீந்திரம் சிவனடியார் திருக்கூட உழவாரப்பணிக்குழு தலைவர் முருகேசன் 9487411700









கருத்துகள்