ஈசனுக்காக இறைத்தொண்டு செய்து வரும் இளையாங்குடி சிவமுருகேசன்.


ஈசனுக்காக இறைத்தொண்டு செய்து வரும் இளையாங்குடி சிவமுருகேசன்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா பூச்சியேந்தல் கிராமம் சொக்கையாபிள்ளை தெருவினை சேர்ந்த  சண்முகம் மீனாம்பாள் ஆகியோரது   மகன் சிவமுருகேசன்(50) இவரது அடிப்படைதொழில் வீடுகளுக்கு வர்ணம் தீட்டும் பணி செய்து வருகிறார்.

 இவர்  சிவன் மேல் கொண்ட இவர் பக்தி பிரேமையினால் சைவ இலக்கியங்கள், கடலளவில் இருந்தாலும், அதில்  தமக்கு தெரிந்த வகையில்
 சிவபுராணம் சிவன்கோயில் வரலாறு போன்றவற்றினை தெரிந்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.ஈசனை நினை தீரும் கர்மவினை என்ற தலைப்பில் 10 கடபுலனங்கள் (குரூப்) மற்றும் மன்னுக தில்லை வளர்க பத்தர் என்ற கடபுலனம் உருவாக்கியும் மேலும் இவரும் 50க்கும் மேற்பட்ட குழுமங்களில்  (குரூப்களில்) இருக்கிறார்.அதன் மூலம் சிவசேவை செய்து வருகிறார்.
 







இதன் மூலம் இவரது கவனத்திற்கு வரும் திருப்பணி செய்யவேண்டிய நிலையில் உள்ள பழமையான  சிவன்கோயில்கள் முட்புதர்கள் மண்டிக்காணப்படும் சிவன்கோயில்கள் தினசரி பூஜைகள் கூட நடைபெறாமல் உள்ள சிவன்கோயில்கள் பற்றி படம் தகவல் கடபுலனத்தில் (வாட்ஸ் அப்பில்) வரும்போது அதை அந்தந்தபகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்து   தகவலை உறுதி செய்து கொள்கிறார்.

  பின்னர் வந்த தகவலை தமது குழுமத்தில் (குரூப்பிலும்) தான் இருக்கும் மற்ற குழுமத்தில்  ( குரூப்பிலும்) பதிவிட்டு  ஆன்மிக பெரியவர்கள் ஆன்மிக செல்வர்கள் செல்வந்தர்கள் சிவாச்சாரியார்கள் ஆகியோர் கவனத்தில் ஈர்த்து பார்வையிடும்படி செய்து அதை  அவர்கள் மூலம் செயல்பாட்டிற்கு கொண்டு வரும்  பல நற்காரியங்கள் செய்து வருகிறார்.

ஒரு கோயிலுக்கு நன்கொடை செய்ய யார் விரும்பினாலும் அதில் உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் செய்வார்கள் அதாவது சமுக வளைதளங்களில் வந்துள்ளது அது உண்மையா என்ற கேள்வி எழும் அந்த கேள்விக்குரிய  அந்த உண்மைத்தன்மையை விசாரித்து குழுவில் பதிவிட்டு சிவத்தொண்டு செய்து வருகிறார்.இவர் மூலம் பல கோயில்களில் பல நல்லகாரியங்கள் நடந்துள்ளது.

குழுமத்தில் வரும்  ஆன்மிக கேள்விகளுக்கு இவருக்கு தெரிந்ததை பதிவு செய்து வருகிறார்.நவீன உலகத்தில் நீண்டதுாரம் செல்லாமல் தன் கையில் உள்ள செல் மூலம் அறிவியல் வளர்ச்சியால் ஆன்மிக தொண்டு செய்து வருகிறார்.

தமிழகத்தில் சிவ பக்தர்கள் பலருக்கு இளையான்குடி சிவமுருகேசன் என்றால் தெரியும் அளவிற்கு சிவதொண்டால் பிறவி கடமையை செய்து வருகிறார் .ஈசனுக்கு தொண்டு செய்யும் இளையாங்குடி சிவமுருகேசனுக்கு சிவன் அருள் புரியட்டும்.இவருக்கு சரவணகுமார் சதீஷ்குமார் என்ற இரு மகன்களும் ராமலட்சுமி என்ற மனைவியும் உள்ளனர்.

வையகம் நீடுக! மாமழைமன்னுக!
அரன்நாமம் சூழ்கவே!
வாழ்க! சீரடியாரெல்லாம்!


அர அர அர அர சிவ சிவ சிவ சிவ!

இளையான்குடி சிவமுருகேசன் சமூக வலைத்தளங்களில் 

 "சிவமுருகேசன் சிவமுருகேசன் என்ற பெயரில், முகநூலில்(ஃபேஸ்புக்கில்)நட்பு வட்டம் உருவாக்கி; 
அதில்," "மேன்மைகொள் சைவநீதி!"என்ற பக்கம்(பேஜ்)என்ற பெயரிலும், சிவநட்பு வட்டத்தை, விரிவுபடுத்தி உள்ளார்

சிவமே தவம்!,என்ற பெயரில், "வலையொளி அலைவரிசை(யூடியூப் சேனல்!)உருவாக்கி, சிவசேவை செய்து வருகிறார்

வாட்ஸ் அப் குரூப், ஸ்!(கடபுலன குழுமங்கள்!) ஈசனைநினை! தீரும் வினை! என்ற பெயரில், மொத்தம் 10குழுமங்கள், மற்றும், மன்னுகதில்லை!வளர்கநம்பத்தர்கள்;,மேன்மைகொள் சைவநீதி! ஆகிய2பெயர்களிலுமாக மொத்தத்தில்12 குழுமங்களையும், "(ஈசனருளால்!)" உருவாக்கி; சிவசேவை ஆற்றிக்கொண்டு இருக்கிறார்













திருநீலகண்டம்!   திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்!

தொடர்புக்கு 8531815038







கருத்துகள்

  1. 🙏 🙏 ஹர ஹர வணக்கம் நன்றி... அருமை அருமை

    பதிலளிநீக்கு

  2. சிவசிவ, எத்தனை, எத்தனையோ அடியார் பெருமக்கள் தமதுவாழ்வையே,அர்ப்பணித்து உள்ளனர்!,இந்த அடியேன், இதுவரை சிவம்,சைவத்திற்காக எதுவுமே செய்ய வில்லை!இன்னும் வாழ்வு இருக்கும் வரை,சிவன் கொடுத்த வாழ்வு,சிவன் கொடுத்த வாய்ப்பு இவற்றை பயன்படுத்தி பல சிவசேவைகள் செய்ய வேண்டும்!"அவனருளாலே அவன் தாள் வணங்கி;" திருச்சிற்றம்பலம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக