திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் பழங்கால சிவன்கோயிலை பக்தர்கள் வழிபாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவில் திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் ஏழுர்பட்டி அருகில் உடையாகுளம் புதுார் என்ற அழகிய கிராமம் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் உள்ளது. இக்கிராமம் ஏழுர்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராமமாகும் இந்த உடையாகுளம் புதுார் கிராமத்தின் அருகில் தலைமலை சஞ்சீவராய பெருமாள் மலை அருகில் உள்ளது.

இந்நிலையில் உடையாகுளம் புதுார் கிராமத்தை சேர்ந்த சிவ தொண்டர் பாலகிருஷ்ணன் என்பவர் தினசரி தோட்டத்திற்கு செல்லும்போது செல்லும் வழியில் நத்தமேடு பகுதியில் அழகிய செடிகொடிகள் மண்டிக்காணப்படும் முட்புதர்களை கண்டார் தொடர்ந்து கண்ட அவர் ஒருநாள் அதை சுத்தப்படுத்திய நிலையில் அதில் அழகிய அருள்பாலிக்க கூடிய சிவ லிங்கத்தை கண்டார்.பின்னர் இது பற்றிய தகவலை அதே பகுதியை சேர்ந்த சிவபழனிச்சாமியிடம் தெரிவித்தார்.இவர் இந்த ஒட்டுமொத்த நிகழ்விலை இளையான்குடி சிவ முருகேசனிடம் தெரிவித்தார்.அவரும் சிவ தொண்டர்கள் பலருக்கு இறைவனின் திருவெளிப்பாடு குறித்து தெரிவித்த வண்ணம் உள்ளார்.இந்நிலையில் மேலும் அந்த இடத்தில் சுத்தம் செய்தபோது அம்பாள்சிலையும்,நந்திகேஷ்வரர் சிலையும் விநாயகர் சிலையும் கிடைத்துள்ளது.

உலகமெல்லாம் நிறைந்திருக்கும் சிவபெருமாள் பூமியின் மேல்தளத்தில் பல கோயில்களில் அளவற்ற அருள்பாலித்து வரும் நிலையில் எக்காலத்திலோ வழிபாடு செய்யப்பட்ட சிவபெருமான் இக்காலத்தில் மனிதர்கள் கண்ணில் படும் நிலையை இந்த வாரம் செய்திருக்கிறார்.
இத்தகைய சிறப்புமிக்க சிவன் காட்சி கொடுத்த இடப்பகுதியில் சிறிய அளவில் ஒரு கோயில் அமைக்க அப்பகுதியில் உள்ள சிவ தொண்டர்கள் சிறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த சிவதொண்டில் தாங்களும் பங்கு பெறலாம்.

இத்திருக்கோயில் திருச்சி மாவட்டம் தொட்டியம் நகரில் இருந்து 10 கி.மீ துாரத்திலும் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் இருந்து 8 கி.மீ துாரத்திலும் அமைந்துள்ளது.
தொடர்புக்கு சிவ பழனிச்சாமி 9688553090
சிவ முருகேசன் 8531815038
சிவ பாலகிருஷ்ணன் 9944850602

கருத்துகள்
கருத்துரையிடுக