பழங்கால கோயில் திருப்பணியில் ஈடுபடும் சம்பூரணி ராஜா

பழங்கால கோயில் திருப்பணியில் ஈடுபடும் சம்பூரணி ராஜா

உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தொழிலில் ஒரு சேவையில் ஆர்வம் இருக்கும் ஆர்வம் என்பது சிலருக்கு சிறுவயதிலேயே நாட்டம் ஏற்பட்டு விடும் இந்நிலையில் பழங்கால கோயில்களை சீரமைப்பது புனரமைப்பது கட்டுமான பணிகளில் பங்கெடுப்பது போன்ற சேவை செய்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா மங்களக்குடி அருகில் உள்ள சம்பூரணி ராஜா(35) என்ற திருப்பணி தொண்டர் குறித்து பார்ப்போம்.



சம்பூரணி கிராமம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து 15 கி.மீ துாரத்திலும் திருவாடனையில் இருந்து 10 கி.மீ துாரத்திலும் அமைந்துள்ளது.இந்த ஊரில் முத்துமாரியம்மன் சித்தர் பீடம் ஒன்றினை கடந்த 10 வருடத்திற்க முன்  அமைத்து அதில் முத்துமாரியம்மன் முனிஸ்வரர் சிவன் முருகன் அகஸ்தியர் போன்ற தெய்வங்களை வழிபாடு செய்து செய்து வருகிறார்.

தொடர்ந்து ஜோதிடம் பார்ப்பது குறிசொல்வது என்பதை அருள்வாக்காக செய்து வருகிறார்.இவரின் அருள்வாக்கினை பல ஊர்களில் இருந்து மக்கள் வந்து செல்கிறார்கள்.












































இந்நிலையில் சில கிராமங்களில் பலநுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் மற்றும் பெருமாள்கோயில்களில் வழிபாடு இன்றி இருப்பதை இவர் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் இவரை அழைத்தால் இவர் முன்னின்று தெய்வ மூர்த்தங்களை பூமியில் இருந்து வெளியில் எடுத்து வழிபாடு செய்ய பூர்வாங்க பணிகளை செய்து கொடுக்கிறார்.









கரூர் அருகில் உள்ள மாயனுார் ருத்ரேஸ்வரர் கோயில்,திருவாடனை அருகில் உள்ள அரசத்துார் நாகநாதர்கோயில்,உஞ்சனை சொக்கநாதர்கோயில்,கல்லிக்குடி பெருமாள் கோயில் போன்ற கோயில்களில் மூர்த்தங்களை வெளியில் எடுத்து வழிபாட்டிற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டவர்.இவர் இப்பணிக்காக எவ்வித கட்டணமும் கோரி பெறுவதில்லை












மாதந்தோறும் பவுர்ணமியில் இவரது பீடத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. இவருடன் 10 சிவனடியார்கள் ஆன்மிக தொண்டர்கள் இணைந்து எவ்வித எதிர்பார்ப்பு இன்றி இலவச சேவையாக கோயில் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவரது ஆன்மிக சேவையை நாமும் பாராட்டுவோம்



தொடர்புக்கு 63815 96943








கருத்துகள்