திருப்பனந்தாள் காசி மடத்தில் கந்த சஷ்டி கவசம் ஆன்மீக நூல் வெளியீடு


 திருப்பனந்தாள் காசி மடத்தில் கந்த சஷ்டி கவசம்  ஆன்மீக நூல் வெளியீடு 


 மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் சரணம் சரணம் சண்முகா சரணம் கந்தர் சஷ்டி கவசம் நூல் வெளியீட்டு விழா திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் நடந்தது.




திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் சரணம் சரணம் சண்முகா சரணம் கந்தசஷ்டிகவசம் என்ற ஆன்மீக  நூலை வெளியிட காசி மடத்து இளவரசு ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.


  நிகழ்வில் மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  மற்றும் ஆதின தம்பிரான் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.

கருத்துகள்