திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோயில்.
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மனநோய் மற்றும்
பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் தலமாகும் . இது சிவனே தன்னை வழிபட்டதலமாகும். பாண்டிய மன்னன் வர குண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷம்நீக்கிய தலம் இது.
பிராமணரை கொலை செய்தல், முன்பின் அறியாதவரை பணத்திற்காகதுன்புறுத்துதல் , குடும்பங்களை பிரிப்பது, போன்ற செயல்களால் பிரம்மஹத்திதோஷம் ஏற்படும்.
இதனால் ஏற்படும் முதல் பாதிப்பு மனநோயாகும்.இப்படி தோஷங்களால் ஏற்படும் மன நோயை தீர்பது கடினம் . ஆனால் இந்ததலத்தில் பிரம்மஹத்தி தோஷத்தால் ஏற்படும் மனநோய் மறைகிறது .
மனநிலை சரியில்லாத ஏராளமானவர்களை மகாலிங்கேஷ்வரர் முன் நிறுத்திவழிபடுகிறார்கள் .இங்குள்ள காருண்யாமிர்த தீர்த்தத்தில் காலை மாலை குளித்து சுவாமியின்முன் நின்று தரிசனம் செய்தால் அவரே மருத்துவராகி நோய்களை குணப்
படுத்துகிறார் . திருமண தடை பித்ரு தோஷம் குழந்தையின் மை போன்றபிரச்சனை உள்ளவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டாலே பிரச்சனைகள்தீருகின்றன .
பாண்டிய மன்னன் வர குண பாண்டியனின் குதிரை பிராமணன் ஒருவனைமிதித்து கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு மனநோய்க்குஆளானான் . அப்போது திருவிடை மருதூர் சென்று வழிபடுமாறு அசிரீரிகேட்டது .அதை கேட்டு திருவிடைமருதூர் கோயிலுக்குள் மன்னன் சென்ற போதுஅவனை பின் தொடர்ந்த பிரம்மஹத்தி ஈசன் முன்பு வர அஞ்சி வெளியே வரும்
போது பிடித்துக் கொள்ளலாம் என்று வாசலில் அமர்ந்தது .
மகாலிங்கத்தின் முன்பு நின்று வழிபட்ட மன்னன் குணமடைந்தான் பிறகுஇறைவனின் உத்தரவுபடி வந்த வழியே செல்லாமல் வேறு வாசல் வழியாகமீண்டு சென்றான் .
இப்போதும் வழிபாடு செய்வோர் உள்ளே சென்று வழிபட்டு
வந்த வழியே திரும்பாமல் அருகில் உள்ள முகாம் பிகை சன்னதி வாசல்வழியாகவே திரும்ப வேண்டும் .பல சித்தர்களால் இந்த தலம் பாடபெற்றுள்ளது. பத்ரகிரியார் முக்தியடைந்ததலம் இதுவே . இங்குள்ள அசுவமேத திருசுற்றை வலம் வருவோர் அசுவமேத
யாகம் செய்த பலனை பெற முடியும் . கும்பகோணத்தில் இருந்து
மயிலாடுதுறை செல்லும் வழி தடத்தில் இந்த திருவிடைமருதார்
அமைந்துள்ளது.
மேலே உள்ள தகவல் சென்னை திரு ஹரி அவர்கள்
(3) ஈசனை நினை தீரும் வினை வாட்ஸ் அப் தளம் மூலம்
(10 8 20)
தொடர்புக்கு 95000 28692
கருத்துகள்
கருத்துரையிடுக