திருமெய்ச்சூர் லலிதாம்பிகை கோயிலில் ஆன்மிக. நூல் வெளியீடு

 திருமெய்ச்சூர் லலிதாம்பிகை கோயிலில் ஆன்மீக நூல் வெளியீடு


 மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் சார்பில் 39 ஆவது வெளியீடாக வருக வருக மயிலோன் வருக - கந்தசஷ்டி நூல் வெளியீட்டு விழா திருவாரூர் மாவட்டம்  திருமெய்ச்சூர் லலிதாம்பிகை திருக்கோயிலில் நடைபெற்றது.


 வேளாக்குறிச்சி ஆதீனம் பதினெட்டாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் வருக வருக மயிலோன் வருக - கந்த சஷ்டி கவசம் நூலை வெளியிட, முதல் பிரதியை திருவாரூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி பெற்றுக்கொண்டார். விழாவில் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன், மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் செந்தில் முருகன், ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் வளவன், ஆசிரியர் உமா சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள்