கோவை பேரூர் மடத்தில் ஆன்மிக. நூல் வெளியீடு

 மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் கோவை பேரூர் மடத்தில் ஆன்மிக நூல்  வெளியீடு


 மயிலாடுதுறை ஆன்மீகப் 

பேரவையின் சார்பில்

நாற்பதாவது நூலான கந்தா குகனே கதிர் வேலவனே -  கந்தர் சஷ்டி கவச நூல் வெளியீட்டு விழா கோயம்புத்தூர் பேரூர் தலைமை மடத்தில் நடைபெற்றது.  நூலை திருக்கயிலாய   மரபு, மெய்கண்டார் வழிவழி, 25 வது பட்டம், கயிலை புனிதர். தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் அவர்கள் வெளியிட, மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையின்  நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர். ராம. சேயோன்  முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.  நூல் வெளியீட்டு விழாவில் பேரூர் மடத்தின் மேலாளர் திருவடி,

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போதகர் தேவசேனன், கோவை சித்தகுருஜி, தவத்திரு  சாந்தலிங்கர் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி பேராசிரியர்கள், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் பள்ளி ஆசிரியர்கள், ஞானாம்பிகை மெட்ரிக் பள்ளி ஆசிரியைகள், தவத்திரு ஆறுமுக அடிகளார் தாய் தமிழ் பள்ளி ஆசிரியர்கள், தொலைதூர கல்வி மையம் பொறுப்பாளர்கள், பேரூர்  மடத்தின் மெய்யன்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள்