நினைத்தததை
நிறைவேற்றும் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்ய மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை வேண்டுகோள்
மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இன்று விநாயகர் சதுர்த்தி பெருவிழா பக்தர்களால் வெகுவிமர்சையாகவும் நேர்த்தியாகவும் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது உள்ள உலக சூழலில், அதுவும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கக்கூடிய வேலையிலே, விநாயகர் அகவலைப் பாராயணம் செய்தால் பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஒரு நன்மை உள்ளது. விநாயகரை வழிபடுவதற்கு விநாயகர் அகவல் முக்கியமான பாராயண பதிகமாகும் .
அவ்வையாரால்
இயற்றப்பட்ட விநாயகர் அகவல் பக்தர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேற்றும். ஒருசமயம் அவ்வையார் தினம்தோறும் விநாயகரை வெகு சிரத்தையாக பூஜை செய்து வழிபட்டு வந்துகொண்டிருந்தார் .
ஒருநாள் மிக அவசரமாக விநாயகர் பூஜையை அவர் செய்து கொண்டிருக்கும் பொழுது , விநாயகர் அவ்வையார் முன் தோன்றி ஏன் பூஜையை அவசரமாக செய்கிறீர்கள் தினந்தோறும் சிரத்தையாக செய்வதுபோல் செய்ய வேண்டுமே ஒழிய இதுபோல் அவசரமாக செய்யக்கூடாது என எடுத்துரைத்தார். அப்பொழுது அவ்வையார் இன்று சுந்தரமூர்த்தி நாயனார் சேரன் மா நாயனாரை கூப்பிட்டுக் கொண்டு கைலாயம் செல்கிறார் அவருடன் நானும் சென்றால் சிரமமின்றி கைலாசம் போய் இறைவனை தரிசிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் பூஜையை அவசரமாக செய்து கொண்டிருக்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் என விநாயகரை வேண்டினார். இதைக்கேட்ட விநாயகர் எதற்காக நீங்கள் கவலைப் படுகிறீர்கள் ஏன் அவசரமாக பூஜை செய்கிறீர்கள் பொறுமையாக பூஜை செய்யுங்கள் உங்களுக்கு நிச்சயம் கைலாய தரிசனம் கிட்டும் என்றார் அதைக் கேட்ட அவ்வையார் உடனடியாக விநாயகர் அகவல் என்னும் பதிகத்தை சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாட என ஆரம்பித்து விநாயகர் அகவலைப் பாடி பின்னர் பூஜைகள் எல்லாம் நிறைவாக செய்தார். அதை பார்த்த விநாயகர் இதை பாராயணம் செய்யும் பக்தர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் என சொல்லி அந்த விநாயகர் அகவலை இயற்றி பூஜையை வெகு சிரத்தையாக நடத்திய அவ்வையாரின் பாங்கினை ஏற்று அவரை தனது தும்பிக்கையால் கைலாசத்துக்கு கொண்டு சேர்த்தார். சிவனடியார்கள் வருவதற்கு முன்பே கைலாசம் சென்ற அவ்வையாருக்கு எல்லோருக்கும் முன்பே கைலாய தரிசனம் கிடைத்தது. அதுதான் வரலாறு அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விநாயகர் அகவலை விநாயகர் சதுர்த்தியான இன்று முதல் பக்தர்கள் பாராயணம் செய்தால் சகல நன்மைகளும் அவர்களுடைய கோரிக்கையும் நிச்சயம் நிறைவேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் ஆன்மீக பக்தர்கள் அனைவரும் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து தங்களுடைய கோரிக்கையை இறைவனிடத்தில் சொல்லி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக