மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் திருக்கடையூர் அபிராமி அம்மன் சந்நிதியில் நூல் வெளியீடு

 மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் திருக்கடையூர் அபிராமி அம்மன் சந்நிதியில் ஆன்மீக நூல் வெளியீடு 



தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன்  சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி தொடக்க விழாவில், மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் திருக்கடவூர் பதிகங்கள் என்ற ஆன்மிக நூலை திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம்  ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர்  ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தம்பிரான்  சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய

சுவாமிகள் நூலை வெளியிட்டார். நூல் வெளியீடு ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் அதன் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம சேயோன் செய்திருந்தார்.

கருத்துகள்