இறைவன் அருளால் கோயில் இருளை அகற்றும் ஆதிசிவன் பவுண்டேஷன்

 இறைவன் அருளால் கோயில் இருளை அகற்றும் ஆதிசிவன் பவுண்டேஷன் 


 முற்காலத்தில் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அதன் விளக்கம் காலை எழுந்து நமது காலைக்கடன்களை முடித்த உடன் இறைவழிபாடு செய்த பின்னரே நமது பணியை தொடர வேண்டும் என்பதுதான் 


அவ்வாறு ஒரு காலத்தில் எல்லா பகுதியிலும் கோயில்கள் கட்டப்பட்டன முறையாக பராமரிக்கப்பட்டன கால ஓட்டத்தில் முனிவர்கள் ரிஷிகள் மன்னர்கள் ஜமீன்தார்கள் அரசர்கள் என பல காலகட்டங்களை கடந்த நமது பாரத பூமி தற்போது சில கிராமங்களில் பிரசித்தி பெற்ற கோயில்கள் இருக்கின்றன அந்த கோவில் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது யாரால் கட்டப்பட்டது கட்டப்பட்ட காலத்தில் அந்த கோவில் பூஜைகளில் யார் செய்தது என்று யாருக்கும் தெரியாது


 ஆனால் தற்போது அந்த பகுதியில் வசிப்பவர்கள் சிவன் மீது பற்றுக்கொண்ட சிவனடியார்கள் மற்றும் கோயில் அருகே குடியிருப்பவர்கள் அந்த கோவிலை சுத்தம் செய்து அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆகம முறைப்படி வழிபாடு செய்து வருகிறார்கள்


 இந்த சூழலில் இறைவனுக்கு முக்கியமான ஒன்று தீபம் தீபம் என்பது இறைவனுக்கு வெளிச்சத்தையும் நமது வாழ்விற்கு முன்னேற்றத்தையும் தரக்கூடியது


 அவ்வாறு பராமரிப்பு இல்லாத வருமானம் இல்லாத .போதிய வருமானம் இல்லாத மிகப்பழமையான கோயில்களுக்கு இரவில் ஒரு காலமாவது தீப ஒளி ஏற்றினால் அந்த ஊர் மட்டுமின்றி அக்கோயிலில் அமர்ந்துள்ள இறைவன் எந்த திசையை நோக்கி தனது பார்வையை செலுத்துகிறார் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் சிரமத்துடன் சிறப்புடன் வாழ வேண்டும்


 என்ற உயரிய நோக்கில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஆதிசிவன் பவுண்டேஷன் கோயில்களுக்கு தீபம் ஏற்றப் பயன்படும் இலுப்பை எண்ணெயை வழங்கிவருகிறது


 கரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக 120க்கும் மேற்பட்ட கோவில்களுக்கும் தற்போது நிதி நிலைமை சீர் இன்றி இருப்பதால் தற்போது 38 கோயில்களுக்கும் வழங்கிவருகிறது கோவில்கள் காஞ்சிபுரம் திருத்தணி திருவள்ளூர் உத்திரமேரூர் செய்யாறு வந்தவாசி ஆகிய பகுதியில் உள்ள கோவில்களை சிவனடியார்கள் மூலம் இனம் கண்டு அந்த சிவனடியார்கள் மூலம் என்னை வழங்கப்பட்டு கோயில்களில் தீபம் ஏற்றப்படுகிறது 


ஆதி சிவன் பவுண்டேசன் தலைவர் சிவசண்முகம் சுவாமிகள் இயக்குனர் பாலகிருஷ்ணன் இணை இயக்குனர் சுப்பிரமணியன் நிர்வாக குழு உறுப்பினர்கள் நரேந்திரன் வினோத் மற்றும் தீப எண்ணெய் உரிய நேரத்தில் கோயில்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வரும் செல்வராஜ் அசோக் குமார் செந்தில் கார்த்திக் பிரகாஷ் ஆகியோரும் மேலும் 14 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இணைந்து இந்த இறைவன் சேவையை செய்து வருகிறார்கள்


 இதில் தாங்களும் விரும்பினால் பங்கெடுத்துக் கொள்ளலாம் தீப வழிபாடு மற்றும் தீப எண்ணை தங்களால் வழங்க விருப்பம் உள்ள அன்பர்கள் தொடர்புக்கு  

8925457595

8778191433

கருத்துகள்