சென்னையில் வீதியில் உணவுக்காக காத்திருக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் ஆதிசிவன் பவுண்டேஷன்
தற்போது கரோனா தாக்கம் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டவர்கள் அரசின் சார்பில் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளித்து அரசு அவர்களை காப்பாற்றி வருகிறது அரசின் சார்பில் தீவிர சிகிச்சை மூலம் தீவிர விழிப்புணர்வு மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஆதி சிவன் பவுண்டேசன் சார்பில் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது
தினசரி அன்னதானம் என்பது தினமும் 75 நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட சாம்பார் சாதம் வெஜ் பிரியாணி ஆகியவை முறையாக பார்சல் செய்யப்பட்டு தன்னார்வ தொண்டர்கள் மூலமாக இருசக்கர வாகனத்தில் சிவசண்முக சுவாமிகள் மற்றும் ராதா ஆகியோர் சாலை ஓரம் ஆதரவற்று இருப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கு அவர்கள் இருப்பிடம் சென்றே கொடுக்கும் உன்னத பணியை செய்து வருகிறார்கள்
தற்பொழுது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவுக்காக சாலையோரம் இருப்பவர்கள் சிரமப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த ஆதி சிவன் பவுண்டேசன் சோழிங்கநல்லூர் பகுதியில் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறது அவர்களின் ஆன்மீக அன்னதான சேவையை மனதார பாராட்டுவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக