திருவாவடுதுறையில்திருமூலர் ஆவணி அசுபதி ஆராதனை பெருவிழா
மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் மற்றும் திருவாவடுதுறை திருமூலர் வழிபாட்டு மன்றம நடத்தும் சித்தர்கள் ஜீவ சமாதி மாத வழிபாட்டின் நிகழ்வான திருமூலர் ஆவணி மாத அசுபதி ஆராதனை பெருவிழா திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை அருள்மிகு கோமுதீஸ்வரர் திருக்கோயிலில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணை வண்ணம் நடைபெற்ற து.
திருவாவடுதுறை வடிவேல் ஓதுவார் திருமந்திர விண்ணப்பத்தினண வாசித்தார்.
திருவாவடுதுறை திருமூலர் வழிபாட்டு மன்றம் சார்பில் பதிப்பித்தளித்த திருமந்திரத் திரட்டு என்ற ஆன்மிக நூலை திருவாவடுதுறை தலைமை மடத்து தம்பிரான் ஸ்ரீமத் திருசிற்றம்பல தம்பிரான் அவர்கள் வெளியிட முதல் பிரதியை தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் தலைவர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் மற்றும் திருக்கோயில் கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருமூலர் ஜீவ சமாதியில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை திருமூலர் திருமன்றத்தின் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் டாக்டர் இராம சேயோன் மற்றும் திருவாவடுதுறை திருமூலர் வழிபாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாணசுந்தரம் மற்றும் துரை ஆகியோர் செய்திருந்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக