இறைவனின் திருவுருவத்தினை சுதையில் செய்து வழிபாட்டிற்கு வர்ணம் தீட்டி வழங்கும் சிற்பி முருகராஜ்
தென்காசி மாவட்டம் விகே புதுார் தாலுகா சுரண்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மகன் முருகராஜ்(43)
இவர் கோயில் சுதை சிற்பங்கள் ராஜகோபுர சுதை சிற்பங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில பல கோயில்களுக்கு சுதை சிற்பம் செய்த முருகராஜ் அண்மையில்
தென்காசி மாவட்டம் கடையநல்லுார் தாலுகா அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள அனந்தவள்ளி சுந்தரவள்ளி சமேத கண்டவேல் சாஸ்தா கோயிலில் மாரியம்மன் கருப்பசாமி சுதையை செய்துள்ளார்
இதுபோன்ற இந்துக்களின் திருவுருவங்களை பழமை மாறாமல் முற்காலத்தில் உள்ளது போல உருவாக்கி வர்ணம் தீட்டி சுவாமிகளின் உருவங்களை தத்ருபமாக செய்து வரும் இவரின் சேவையை பாராட்டுவோம் இவரதுமகன் வேங்கடரமணன் அருணகிரி ஆகியோர் மாமல்லபுரம் சிற்ப மற்றும் கட்டிடகலைக்கல்லுாரியில் கற்சிற்பம் மற்றும் சுதை சிற்பம் குறித்து பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
தொடர்புக்கு 9344902449
கருத்துகள்
கருத்துரையிடுக