கோயில் கோபுரங்கள் மற்றும் சுவாமி சுதைகளுக்கு வர்ணம் தீட்டும் சிற்பி மாயாண்டி



கோயில் கோபுரங்கள் மற்றும் சுவாமி சுதைகளுக்கு வர்ணம் தீட்டும் சிற்பி மாயாண்டி





இந்துக்கள் வழிபாட்டில் கோயில் வழிபாடு தாங்களின் வாழ்வுடன் கலந்து வழிபாடாகும்.நகரங்களிலும் கிராமங்களிலும் கோயில்களுக்கு நாம் செல்லும்போது கோயில் கோபுரத்தையும் கிராம தேவதைக்கோயில்களில் பரிவார தெய்வங்களின் வாகனங்களை காண்போம் 




அப்போது அதில்  தீ்ட்டப்பட்டுள்ள வர்ணங்கள் அவை தத்ருபமாக காட்சியளிக்கும்போது அவை நம்மை ஈர்க்கும்

 அவ்வாறு வர்ணம் தீட்டும் சிற்பியாக உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் மாயாண்டி(41) என்பவரின் இறைப்பணி குறித்து காண்போம்.






இந்நிலையில் கோயில்களின் கோபுரம்,கோயில் முகப்பு சீலிங் மற்றும் கோயில்களில் உள்ள சுதைகள் சுவாமியின் திருவுருவங்கள் முகப்பு துவரபாலகர் திருவிழாக்காலங்களில் சுவாமி எழுந்தருளல் செய்யும்போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் கோயில் உள் வளாகத்தில் சுவாமி படம் வரைதல்  ஆகியவற்றிற்கு தத்ருபமாக இருக்கும் விதம் வர்ணம் தீட்டும் பணியை செய்து வருகிறார்.

கோயில் பணிகளில் சுதைப்பணி முடிந்து சுதை சிற்பிகள் பணி நிறைவடைந்த நிலையில் பெயிண்ட் கொடுக்கும் பணியை இவர்  செய்து வருகிறார்.


கடந்த 18 வருடத்திற்கு முன்னர் தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த ஒவியர் பாஸ்கரின் பணிக்கு சேர்ந்த மாயாண்டி ஒவியர் மூலம் எழுதும் பணிக்கு நல்ல தேர்ச்சி பெற்றார் 






பின்னர் இவர் ஒரு கட்டத்தில் கோயில் கோபுரம்,கோயில்களில் சுதைகளில் கட்டப்பட்ட சுவாமியின் திருவுருவங்கள் மற்றும் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணியை செய்து வருகிறார்




   




இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள நடராஜன் ஸ்பதியின் வாகன சிற்பகூடத்தில் ரதம் மற்றும் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டார் நடராஜன் ஸ்தபதி மூலம் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டார்.




 .இவர் தனக்கு ஒரு குழுவினை ஏற்படுத்தி அதன் மூலம் கோயில் கட்டும் அன்பர்கள் அழைக்கும் பட்சத்தில் அவர்கள் கோயிலுக்கு சென்று வர்ணம் தீட்டும் பணியை செய்து வருகிறார்.







தமிழகத்தில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் அதிக கோயில் பணி செய்த இவர் தற்போது கர்நாடகா பகுதியிலும் கோயில்களுக்கு வர்ணம் தீட்டும் பணியை செய்து வருகிறார்.இறைத்தொண்டு செய்து வரும் மாயாண்டியை பாராட்டுவோம்.


தொடர்புக்கு 9486818101

97871 06702

கருத்துகள்