கற்கோயில்கள் கட்டிவரும் தேவராஜ் ஸ்தபதியார்.
இந்துக்களின் வழிபாட்டில் கோயில் வழிபாடு முக்கியமான ஒன்றாகும்.சமயம் சார்ந்த வழிபாடாக உள்ளது.முற்காலத்தில் உள்ள புராணங்கள் அடிப்படையில் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன சில கோயில்கள் எக்காலத்தில் கட்டப்பட்டது என்று தெரியாத அளவிற்கு பழமையான கோயில் உள்ளது.
அக்கோயில்கள் அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டதாகும்.அக்காலத்தில் ஒரு குழுவாக பயிற்சி பெற்ற ஸ்பதிகள் மன்னரின் கட்டுப்பாட்டில் கோயில்கள் கட்டினர் அதுபோன்று தற்போதும் முற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் போலவே கற்களால் கட்டும் பணி நடந்து வருகிறது
இந்நிலையில் கற்கோயில்கள் கட்டிவரும் ஸ்தபதி தேவராஜ்(42) குறித்து பார்ப்போம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகில் உள்ள புளிக்கண்மாய் என்ற கிராம பகுதியை பூர்வீகமாக கொண்டு தற்போது மைசூரில் விஜயநகரம் பகுதியில் வசித்து வருகிறார்.இவர் மகாபலிபுரம் தஞ்சையில் முறையாக சிற்பக்கலை பயின்றவர்.சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் தன் கோயில் கட்டும் பணியை ஆரம்பித்தார் கடந்த 22 வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டு வரும் இவர் 150க்கும் மேற்பட்ட சிற்ப தொழிலார்கள் மூலம் 178 கோயில் திருப்பணி செய்துள்ள இவர் தற்போது 11 கோயில் திருப்பணி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து பல ஊர்களில் பல முக்கிய கோயில்கள் கட்டும் பணி செய்துள்ளார்.தற்போது மைசூர் மகாராஜா 4வது ராஜசிம்ம உடையாருக்கு 11 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி இவரது குழுவால் நடந்து வருகிறது.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானாவில் லட்சுமி நரசிம்மர் கோயில் கட்டும்பணியில் வரைபடம் வரைந்து கொடுத்து தன் பங்களிப்பினை செய்துள்ளார்.
தற்போது கேரளாவில் சிவானந்த ஆசிரமம் நான்கு ராஜ கோபுரங்களுடன் கூடிய கல் திருப்பணி வேலையில் ஈடுபட்டுள்ளார். மேலும் மைசூர் அருகில் லட்சுமி வராகநாதசுவாமி கோயில் கட்டும் பணி கடந்த 2011 முதல் இவரது குழுவால் நடந்து வருகிறது இது போன்று கோயில்கள் கட்டி நாம் மட்டுமல்ல நமது சந்ததிகளும் வழிபட வழிகோளும் தேவராஜ் ஸ்பதியின் சேவையை பாராட்டுவோம்
இவர் இதுவரை திருச்சி சத்ரு சம்ஹாரசுவாமிகள் மூலம் சிற்பக்கலை சிகாமணி,சென்னையில் சித்த செம்மல் பட்டமும் சவுத்ஏசியன் அமைப்பின் மூலம் பெஸ்ட் ஆர்கிடெக் பட்டமும் குளோபல் யுனிவர்சிடி மூலம் டாக்டர் பட்டமும் கர்நாடக அரசின் மூலம் சிற்ப கலாசேத்ர விருதும் மைசூர் அரண்மனை சார்பில் விருதும் பெற்றுள்ளார்.
பலர் பல சேவைகள் செய்தாலும் கோயில் கட்டும்பணி போன்ற சேவை செய்வோர் தன் நலன் கருதாது பிறர் நலம் கருதி கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திலேயே தங்கி இது போன்ற பணிகளில் ஈடுபடும் அன்பர்களை பாராட்டுவோம்.
தொடர்புக்கு 9449774772
சிறந்த கருத்துகள் அருமையான விளக்கம் அருமை நன்றி
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார்
Arumai aiyya....
பதிலளிநீக்கு