மாயவரம் மயூரநாதர் கோயிலில் துலா உற்சவம்

 நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் துலா  உற்சவ. வழிபாடு நடந்தது


 நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் முற்காலத்தில் மாயூரம் திருமயிலாடுதுறை என்று அழைக்கப்பட்ட நாகப்பட்டினத்தில் பிரசித்திபெற்ற மயூரநாதர் கோவில் உள்ளது இக்கோயில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன கட்டுப்பாட்டில்  உள்ள.  ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலாகும்




 இக்கோவில் காவிரி தென்கரை தலங்களில் 39ஆவது தலமாக உள்ளது இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் ஆடிவெள்ளி ஐப்பசி மாத துலா ஸ்நானம் ஆகிய விழாக்கள் நடைபெறும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்


 இக்கோவில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 274 சிவாலயங்களில் இது 102 வது தேவாரத்தலம் ஆகும் இக்கோவிலில் வேண்டுதல் உள்ளவர்கள் மனமுருக வேண்டி காவிரியில் நீராடி சிவனையும் அம்பாளையும் வழிபட நற்பலன் கிட்டுகிறது


 இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  முன்னிலையில்  நடந்த. துலா   உற்சவத்தை முன்னிட்டு ஐந்தாம் நாள் விழாவை முன்னிட்டு   மயில்  அம்மன் பூஜை விழா நடந்தது இதில் அரசின் விதிப்படி பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு செய்தனர்


கருத்துகள்