கூச்சு குளத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ. வழிபாடு

 கூச்சுகுளத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது


 விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர்  தாலுகா  கூச்சு குளத்தூர் கிராமத்தில் பழமையான ஈஸ்வரர் கோயில் உள்ளது


 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த சிவன் கோவிலில்  பூமிக்குள்  இருந்து  அருள் பாலித்த புதையுண்ட நந்தி எம்பெருமானை வெளியே எடுத்து முதலாவது பிரதோஷ வழிபாடு நடந்தது


 கூச்சுகுளத்தூர் கிராம பகுதியை சேர்ந்த சிவ பக்தர்கள் அன்பர்கள் சிவ தொண்டர்கள் சிவனை வழிபடும் அன்பர்கள் அனைவரும் இணைந்து கோகிலாம்பாள் உடனுறை கூச்சுகுளத்தீஸ்வரர் சுவாமிக்கு அனைத்துவித சிறப்பு அபிஷேகமும் செய்து அதனைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது


 இந்த வழிபாட்டில் கூச்சு குளத்தூர் சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்


கருத்துகள்