ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் சோமவார விழா நடந்தது
ஆவுடையார்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக சிறப்பு மிக்க பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி ஆத்மநாதர் யோகாம்பிகா மாணிக்கவாசகர் குதிரைச்சாமி வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடந்தது தொடர்ந்து குருந்த மூலம் முன்பாக சங்கு அடுக்கப்பட்டு நம்பியார்களால் உரிய பூஜை செய்து குருந்த மூலத்திற்கு சங்காபிஷேகம் நடந்தது மாணிக்கவாசகருக்கு சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக