நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் பணியாளர்களுக்கு குருமகா சன்னிதானம் தீபாவளி புத்தாடை வழங்கினார்.

 நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி  கோயில் பணியாளர்களுக்கு குருமகா சன்னிதானம் தீபாவளி புத்தாடை வழங்கினார்.





நாகப்பட்டிணத்தில் பிரசித்தி பெற்ற மயூரநாதசுவாமி  கோயில் உள்ளது

முற்காலத்தில் மாயூரம் எனவும் திருமயிலாடுதுறை எனவும் அழைக்கப்பட்ட இந்த ஊர் தற்போது மயிலாடு துறை என அழைக்கப்படுகிறது அம்பாள் பெயர் அபயாம்பிகை காவிரி தென்கரை தலங்களில் 39 ஆகவும் தேவாரபாடல்பெற்ற தலங்களில் 102 ஆகவும் உள்ளது. வேண்டுதல் உள்ளவர்கள் தாங்கள் வேண்டுதல் செய்த காரியங்கள் நிறைவேற காவிரியில் நீராடி இத்தல இறைவனை வழிபட நற்பலன் கிட்டுகிறது.இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார் 


இக்கோயிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீபாவளி தோறும் புத்தாடைவழங்கப்படுவது வழக்கம்.அதன்படி திருக்கயிலாய பரம்பரை  திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 105 பணியாளர்களுக்கு புத்தாடையும் தலா ரூ.ஆயிரம் ரொக்கப்பணமும் வழங்கினார்.


கருத்துகள்