அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா
கும்பகோணம் தாலுக்கா அம்மா சத்திரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு தமிழ் கார்த்திகை மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவ சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் நடத்தப்பட்டது.
ஸ்ரீ கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான ஊழியர்களும் திருக்கோயில் சிவாச்சாரியார் சதீஷ் கண்ணனும் மற்றும் மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் ஆகியோர் செய்து இருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக